பிரிட்டன் நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடந்திய உலக நாடுகளின் வறுமை கணிப்பு ஆய்வில் இந்தியாவிற்கு 2வது இடம் கிடைத்துள்ளது, இதில் சில திடுக்கிடும் உண்மைகளும் கிடைத்துள்ளது. இந்தியா வளரும் நாடுகளில் முதன்மையான ஒன்று என்பது நாம் அனைவரும் தெரியும். இந்நிலையில் ஏழை நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது எத்தனை பேருக்கு தெரியும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், தென் ஆசிய பகுதியில் இருக்கும் ஏழை நாடுகளை பற்றி நடத்திய ஆய்வில் இந்தியா 340 மில்லியன் ஆதரவற்ற மக்களை கொண்டு இப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது, இதில் ஆப்கானிஸ்தான் முதல் இடத்தை படித்துள்ளது.
மேலும் இந்த ஆய்வில் கிடைத்த தகவலின் படி உலகின் 49 நாடுகளின் மொத்த ஏழை மக்கள்தொகையில் 40 சதவீத மக்கள் இந்தியாவில் உள்ளதாக ஆக்ஸ்போர்டின் பல பரிமாண வறுமை குறீயிடு (MPI) 2014 தெரிவிக்கிறது. தென் ஆசிய பகுதியில் ஆப்கானிஸ்தானில் 38 சதவீத ஆதரவற்ற மக்களும், இந்தியாவில் 28.5 சதவீதம் ஆதரவற்ற மக்கள் உள்ளதாக இந்த புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. அதேபோல் இந்தியாவின் அண்டை நாடான பாங்களாதேஷ் மற்றும் பாக்கிஸ்தானில், 17.2 சதவீதம் மற்றும் 20.7 சதவீதம் ஆதரவற்ற மக்கள் உள்ளனர் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இப்பட்டியலில் டாப் 5 இடங்களை பிடித்த நாடுகளை இப்போது பார்போம். இதில் முதல் இடத்தை பிடித்தது ஆப்கானிஸ்தான், தனது மொத்த மக்கள் தொகையில் 66 சதவீத மக்கள் MPI கோட்டிற்கு கீழ் உள்ளனர்.
இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 54 சதவீத மக்கள் MPI கோட்டிற்கு கீழ் உள்ளனர். இது இந்தியாவின் மோசமான பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மையை காட்டுகிறது. இந்தியாவின் அண்டை நாடான வங்காளம் இதில் முன்றாவது இடத்திலும், பாக்கிஸ்தான் நான்காவது இடத்திலும் உள்ளது. இவைகளை தொடந்து நேபால், பூட்டான், இலங்கை, மால்தீவுகள் அடுத்தடுத்த இடங்களை பிடிக்கிறது. ஆய்வு நடத்தப்பட்ட 49 நாடுகளில் இந்தியாவின் பீகார் மாநிலம் மிகவும் வறுமையான பகுதியாக கருதப்படுகிறது
No comments:
Post a Comment