தமிழக தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது பாரபட்சமின்றி தேர்தல் பாதுகாப்பு பணியாற்ற வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் விவாதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 2626 வழக்குகள் பதிவாகி உள்ளன. தமிழகம் முழுவதும் 57 ஆயிரம் போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 17 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுவரை 200 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வந்துள்ளனர். கூடுதலாக 85 கம்பெனி படையினர் வர உள்ளனர். இவர்களுக்காக 8250 ரோந்து வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.
தமிழ்நாட்டில் மொத்தம் 54 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment