உலகம் முழுக்க கிட்டத்தட்ட பேஸ்புக்குக்கு அடிமையாகிவிட்டதோ எனும் அளவு, அந்த நெட்வொர்க் பரந்து விரிந்துவிட்டது.
உலகின் முதல் நிலை இணையதள நிறுவனமான கூகுளே அஞ்சும் அளவுக்கு பேஸ்புக் அபார வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
இப்போது இதற்குப் போட்டியாக புதிய சமூக நெட்வொர்க் தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார் பில் நிகுயென் என்பவர்.
இந்த தளம் ஸ்மார்ட்போன்களில் இயங்கக் கூடிய மொபைல் இணையதளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன், ஆண்ட்ராய்ட் போன்களை வைத்திருப்போர், தங்களுக்குள் எளிதில் தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து கொள்ளமுடியும்.
கணிப்பொறி யுகத்துக்கு பிந்தைய காலகட்டத்தில் மிக முக்கியமான வளர்ச்சியாக இந்த 'கலர்' சமூகத் தளம் பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment