தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நான் சமாளித்து விடுவேன். நீங்கள் சமாளிப்பது கஷ்டம்: விஜயகாந்த்
ஆளும் கட்சியினர் பாலாற்றில் மணல் கொள்ளையும், ஆட்சியில் பகல் கொள்ளையும் அடித்தனர். பாலாற்றில் 100 லாரிகளில் மணல் அள்ள லைசென்ஸ் கொடுத்து விட்டு 5 ஆயிரம் லாரிகளில் மணலை கடத்துகின்றனர்.
தண்ணீருக்காக இவர்கள் போராடவில்லை. மணல் எடுப்பதற்காக போராடினார்கள். உங்களை (மக்கள்) ஏமாற்றி உங்கள் வரிபணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள்.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் நாடு நாடாக இருக்கும். இன்று விலைவாசி விண்ணை முட்டுகிறது.
மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்ணாவின் வழிவந்தவர்கள் என்று கூறி ஏமாற்றுபவர்களுக்கு ஓட்டு போட வேண்டுமா? அவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.
அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்ய நான் பெரிதும் நேசித்த எம்.ஜி.ஆரின் கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளேன். நான் ஆட்சியில் பங்கோ, துணை முதல்வர் பதவியோ கேட்கவில்லை.
நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் கட்சியினர்கள் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.
சிப்பாய் கலகம் நடந்த இந்த வேலூரில் மக்கள் தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும். வேலூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள நிலத்தை அபகரிக்க தி.மு.க.வினர் முயல்கின்றனர். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நான் சமாளித்து விடுவேன்.
பொதுமக்களாகிய நீங்கள் சமாளிப்பது கஷ்டம். எனவே அ.தி.மு.க. கூட்டணி
வெற்றி பெற இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள்’’ என்று பேசினார்.
No comments:
Post a Comment