புதுடில்லி: உலக கோப்பை தொடரில் இன்று டில்லியில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் பலம்குன்றிய நெதர்லாந்து அணியை நொறுக்கித்தள்ள இந்திய அணி காத்திருக்கிறது.
இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடக்கும் "பி' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு), தோனி தலைமையிலான இந்திய அணி, "கத்துக்குட்டி' அணியான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
15 ஆண்டுகளுக்கு பின்:
முதல் லீக் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை "டை' செய்தது. பின் அயர்லாந்தை அடக்கிய முனைப்புடன் இன்று நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இதில், வெற்றி பெறும் பட்சத்தில் 7 புள்ளிகளுடன், சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் நடக்கும் உலக கோப்பை தொடரில் "நாக்-அவுட்' சுற்றான காலிறுதிக்கு முன்னேறலாம். முன்னதாக கடந்த 1996ல் இந்தியா-பாகிஸ்தான்-இலங்கை மண்ணில் நடந்த தொடரில், அரையிறுதி வரை இந்திய அணி முன்னேறியது.
பலமான பேட்டிங்:
இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. வங்கதேச அணிக்கு எதிராக சதம் கடந்த சேவக், அதன்பின் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே இன்று எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதேபோல மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், மீண்டும் ஒரு சதம் கடந்து சாதிக்கலாம். "சூப்பர் பார்மில்' உள்ள காம்பிர், அதிரடி காட்டும் பட்சத்தில் ரன் மழை பொழியலாம். அயர்லாந்துக்கு எதிராக "ஆல்-ரவுண்டராக' ஜொலித்த யுவராஜ் சிங், இன்றும் சாதிக்கலாம். இவருடன் கேப்டன் தோனி, விராத் கோஹ்லி, யூசுப் பதான் உள்ளிட்டோர் "மிடில்-ஆர்டரில்' அசத்தும் பட்சத்தில், 400 ரன்களுக்கு மேல் சுலபமாக எட்டலாம். சுரேஷ் ரெய்னா வாய்ப்பு பெறும் பட்சத்தில், "ஆல்-ரவுண்டராக' அசத்தலாம்.எட்டு ஆண்டுகளுக்கு பின்...
சர்வதேச ஒருநாள் மற்றும் உலக கோப்பை அரங்கில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் ஒரே ஒரு முறை மட்டும் மோதி உள்ளன. இன்றைய போட்டி மூலம் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பின், 2வது முறையாக (2003, 2011) மோத உள்ளன. கடந்த 2003ல் நடந்த உலக கோப்பை தொடரில், முதலில் பேட் செய்த இந்திய அணி 204 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. பின்னர் பவுலிங்கில் அசத்திய இந்தியா, நெதர்லாந்தை 136 ரன்களுக்கு சுருட்டியது

No comments:
Post a Comment