|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 March, 2011

Citizen observers needed, says Naresh Gupta



நேர்மையானவர்கள் பதவி வகிக்க தூய்மையானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்,'' என, முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேசினார்.

கடலூர் மாவட்ட யூத் எக்ஸ்னோரா கிளப் சார்பில், "தூய்மை மற்றும் நேர்மையான தேர்தல் 2011' என்ற விழிப்புணர்வு கருத்தரங்கம், பண்ருட்டியில் நேற்று நடந்தது.

விழாவில், முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேசியதாவது: இளைஞர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும். நேர்மையானவர்கள், பதவி வகிக்க தூய்மையானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்காக அனைவரும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும். மக்கள் சேவை செய்வதற்காகத் தான் அதிகாரிகள் உள்ளனர். அரசு பணியில் லஞ்சம் பெற்றால் தான் பணிகள் நடைபெறும் என்னும் நிலை உள்ளது. 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்தியாவில் அறிவியல் விஞ்ஞானிகள், தொலைத்தொடர்பு, மருத்துவம், கல்வி உள்ளிட்ட வசதிகள் அறவே இல்லை. ஆனால், தற்போது அனைத்து வசதிகளும் பெற்றாலும் ஊழல் பாதையில் செல்வது தவறு. இது கண்டிக்கத்தக்கது.இவ்வாறு நரேஷ் குப்தா பேசினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...