|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 April, 2011

இந்தியக் கேப்டன் டோணி ஒரு சூப்பர் ஹிட் சினிமா இயக்குநர் மாதிரி, ரமீஸ் ராஜா

பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜாகூறுகையில், "உலககோப்பையை இந்தியா வெல்ல டோணி தலைமைதான் காரணம். வீரர்கள் தேர்வு செய்வதில் அவர் கையாண்ட விதம் சிறப்பானது.

ஒரு சூப்பர் ஹிட் சினிமா படத்துக்கு ஏற்ற நட்சத்திரங்களை இயக்குநர் தேர்வு செய்வதைப் போலவே டோணியும் வீரர்களை தேர்வு செய்துள்ளார். வீரர்கள் தேர்வில் அவர் எடுத்த துணிச்சலான முடிவுதான் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தது.

அஸ்வினுக்கு 2 ஆட்டத்தில் வாய்ப்பு கொடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதியில் அவருக்கு பதிலாக நெஹ்ரா சேர்க்கப்பட்டார். தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நெஹ்ரா மோசமாக பந்து வீசியதால் அவரது தேர்வை விமர்சனம் செய்தார்கள். ஆடுகளம் வேகப் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் அவர் துணிச்சலாக நெக்ராவை தேர்வு செய்தார்.

அதற்கு ஏற்றவாறு அவரும் சிறப்பாக வீசினார். இதே போல யூசுப் பதான் லீக் ஆட்டங்களில் சரியாக ஆடாததால் ரெய்னாவுக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் தனது முடிவுப் படி வீரர்களை தேர்வு செய்கிறார்.

அதேபோல வீரர்களிடம் அவர் நடந்து கொள்ளும் விதமும் சிறப்பாக இருக்கிறது. டெண்டுல்கர், ஷேவாக்கிடம் அவர் தனது எல்லையை தாண்டிப் பேசுவதில்லை. இதுதான் அவர் மீது எல்லோருக்கும் புதிய மரியாதையை வரவழைத்துள்ளது," என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...