|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 April, 2011

நடக்குமென்பார்; நடக்கும்! தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்.


மேஷம்:
இந்த வருடம் நல்ல நியூஸ் இருக்கு. பார்ட்டி, ட்ரீட்டுன்னு ஜாலியாவும் இருப்பீங்க. அதேசமயம் வெளியூர் வெளிநாடுன்னு பயணங்களும் உண்டு. வேண்டாத எறும்பு மேட்டருக்கெல்லாம் டென்ஷனாகிப் பல் கடிக்காதீங்க. பல் பிழைச்சுப் போகட்டும். எடுத்த காரியத்தை போஸ்ட்போன் பண்ணிக் கடைசியில் மலையாய் வேலையைக் குவிச்சுக்காதீங்க. பொழுதுபோக்குக்கு நிறைய நேரம் செலவிடுவீங்க. கண்டிப்பா அதுவும்தான் தேவை. ஆனா கடிகாரத்திலும் காலண்டரிலும் ஒரு கண் வெச்சுக்கறது நல்லது. சொல்றதைச் சொல்லிட்டேன். அதுக்கு மேல உங்க இஷ்டம். உங்கள் குழந்தைகளுக்கு மேலும் மேலும் குட் நியூஸ் உண்டு. உங்க சந்தோஷத்துக்கு இதைவிட வேற என்ன காரணம் வேண்டும்! உங்களுக்கும் படிப்பில் உற்சாகம் படிப்படியாக உயர்ந்து பாராட்டும் பரிசும் வாங்குவீங்க.

ரிஷபம்:
அடேயப்பா. வாழ்க்கையில் மனசு வந்து இந்த அளவு செலவு செய்திருப்பீங்களா நீங்க. பரவாயில்லை. நீங்க முழு மனசோட கார்டைத் தேய்க்கத் தேய்க்க மகாலட்சுமி கஜானாவை நிரப்பிடுவா. தைரியமாய் இருங்க. உங்களுக்கு எது அவசியம் எது அநாவசியம்னு கரெக்ட்டாய்த் தெரியும். அலுவலகத்தில் கொஞ்சமும் எதிர் பார்க்காத உயர்வு ஒன்று ஜூன் மாதத்தில் கிடைக்கும். திருமணத்துக்காகக் காத்திருப்பவர்கள், குழந்தைக்காக ஏங்குபவர்கள், உத்தியோகத்தில் தேய்ந்து கொண்டு மாற்றம் எதிர்பார்ப்பவர்கள், வீட்டை ஆரம்பித்துவிட்டு விழி பிதுங்கிக் கொண்டிருப்பவர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியான செய்திகள் உண்டு. சாப்பாட்டு விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாய் இருந்துட்டா போதும்பா. ஆரோக்கியம் அற்புதமாய் இருக்கும். தம் அடிக்கவோ தண்ணி போடவோ நண்பர்கள் வற்புறுத்தினால் அவர்கள் நண்பர்கள் அல்ல; எதிரிகள் என்பதை சேவ் பண்ணி பாஸ்வேர்ட் போட்டு வெச்சுடுங்க

மிதுனம்:
அப்பாடா. நிறைய காலம் கழிச்சு நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும். சாமியே இல்லைன்னு படத்தையெல்லாம் திருப்பி வெச்சிருப்பீங்க. இப்போ எல்லாத்தையும் சரியா வைப்பீங்களாம். முக்கியமான பொருட்களை அந்தந்த இடத்தில் ஜாக்கிரதையா வைக்கக் கத்துக்குங்க. இந்த வருடம் வேற அலுவலகம், வேற பள்ளிக்கூடம், புதிய கல்லூரி சேரப்போறீங்க. வாழ்த்துக்கள். மம்மிக்கு இருந்து வந்த பிரச்னைகளுக்கெல்லாம் வந்தே மாதரம்னு மங்களம் சொல்லி மகிழ்ச்சியடைவீங்க. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாகக் கட்டுப்படாமல் இருந்த செலவுகள் எல்லாம் நல்ல முறையில் கட்டுக்கடங்கி இதுபோல் பேங்க் பேலன்ஸை நீங்க கண்ணால பார்த்து ரொம்ப காலம் ஆச்சுன்னு முகம் மலர்வீங்க. ஆரோக்கியமா ஃபைன், நிதி நிலையா திருப்திகரம், குடும்ப மகிழ்ச்சியா சூப்பர்னு உங்க லிஸ்ட்டில் உள்ள எல்லா அயிட்டமும் பச்சை ஸ்கெட்ச் பேனாவால டிக் வாங்கும்.
கடகம்:
நமக்கு மிஞ்சி யாரும் இல்லைன்னு தன்னம்பிக்கையோட நினையுங்க. நம்மை மிஞ்ச யாரும் இல்லைன்னு கர்வத்தோட நினைக்காதீங்க. குழந்தைகள் வாழ்க்கையில் ஓரிரு தடைகள் ஏற்பட்டாலும் கடைசியில் எல்லாமே வெற்றிகரமாக நடக்கும். குழந்தைக்காகக் காத்திருக்கறவங்களுக்கு 2011 கடைசியில் நல்ல செய்தி உண்டு. நண்பர்களால் நன்மை நிறைய ஏற்படும். வாழ்க்கையில் சந்தோஷமான திருப்புமுனை 2012 ஆரம்பத்தில் உண்டு. பொறுப்பை உணர்ந்து செயல்படுங்க. கடமையைச் சரிவர செய்தாகணும்...தட்டிக் கழிக்கப் பார்க்காதீங்க. பெற்றோர்களுக்குப் பெரிய பொறுப்பு ஒண்ணு முடியும். அப்பாடா! கலைத் துறையில் உள்ளவர்களுக்கு இந்த வருடம் நிறையப் புதிய பொறுப்புகள் வந்து அதனால பர்ஸ், பீரோ, பாஸ்புக் எல்லாம் நிறையும். அலுவலகத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையா அடி எடுத்து வைக்கறது நல்லது.
சிம்மம்:
வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். கொடுத்த பொறுப்பை நிறைவேற்றிட்டீங்க. இனி எல்லாம் சுபமே. குழந்தைகளுக்காகக் கவலைப்பட்டீங்க... வேதனைப்பட்டீங்க. எல்லாமும் சரியாகிவிடும். இனி குட்டீஸ்க்காக நிம்மதியடைவீங்க, மகிழ்ச்சியடைவீங்க, பெருமைப்படுவீங்க. வார்த்தைகளால் பிரச்னைகள் ஏற்பட்டுக்கிட்டிருந்த நிலை மாறி வாக்கினால் நன்மை, லாபம், பெருமை, முன்னேற்றம், மகிழ்ச்சி (கவனிங்க எல்லாமே பாசிட்டிவ் வார்த்தைகள்) ஆகியவை ஏற்படும். கல்விக்காக நிறைய செலவை செய்வீங்க. அது உங்களுடைய கல்வியாகவும் இருக்கலாம், மற்றவர்களின் கல்வியாகவும் இருக்கலாம். வெளியூர் வெளிநாடு செல்ல நிறைய வாய்ப்பு இருக்கு. எதையும் கவனத்துடன் இரண்டு முறை சரிபார்த்து செய்யுங்க. குறிப்பா அலுவலகவாசிகளுக்கு இந்த வாக்கியம் மஞ்சள் நிற ஹைலைட்.
கன்னி:
புது வேலை மாறியிருப்பீங்க அல்லது மாறப் போறீங்க. அதிகப் பொறுப்புன்னு புலம்பல் செய்யாதீங்க. சாப்பிடத் தூங்க நேரம் இல்லைன்னு அலம்பல் செய்யாதீங்க. எடுத்த எடுப்பில் எல்லாமே வெற்றிகரமாய் முடியுதே அதுக்கே பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்க வேண்டாமோ! வாழ்க்கை வசதிகள் குறைந்ததாய் நீங்களாகக் கற்பனை செய்து புலம்ப வேண்டாம். முன்பைவிட இப்போ அதிர்ஷ்டம் அதிகமாகியிருக்கா இல்லையா? உங்கள் டி-ஷர்ட்டின் டி மேல் கை வைச்சு சொல்லுங்க. வெளிநாட்டுக்குச் சென்றிருக்கும் நெருங்கிய உறவினர்கள் திரும்பி வருவாங்க. சிலருக்கு வீட்டில் குட்டிக் குரல் கேட்க ஆரம்பிக்கும். சிலருக்கு வீட்டில் புதிய பெரிய குரல் கொஞ்சும்! நிறைய ஜாலி டூர் போவீங்க. புதிய வீட்டுக்கு அஸ்திவாரம் போடுவீங்க. பணத்துக்காகக் கொஞ்சம் அல்லாட வேண்டியிருக்கும். கவலை வேண்டாம். வெற்றிகரமான அலைச்சல்தான்
துலாம்:
குடும்பத்தில் ஒரு நபர் அதிகமாவார். உழைப்புக்கு வெற்றி உண்டு. முன்பு வேலை விஷயமாக நிறைய அலையவேண்டியிருந்தது. இனி நிரந்தரமாக ஓரிடத்தில் இருந்து வேலை செய்வீங்க. உங்க திறமைக்கு ஏற்ற பாராட்டுக்கள் குவியும். பரிசுகளும் உண்டு. வார்த்தைகள் வரிக்கு வரி பலிக்கும்.
எனவே நல்ல விஷயங்களை மட்டுமே பேசுங்க. கலைத்துறையில் உள்ளவர்கள் மேலும் அதிக வெற்றிகளைச் சுவைக்கப் போறீங்க. அரசியலில் இருப்பவர்கள் இது கனவா நிஜமா என்று கிள்ளிப் பார்த்துக் கொள்ளும்படியான வெற்றிகளை அடையப் போறீங்க. மற்றவர்கள் வீட்டு விருந்துகளிலேயே கலந்து கொண்டு பழக்கப்பட்டிருந்த நீங்க மற்றவர்களுக்கு விருந்து வைப்பீங்க. நண்பர்கள் ஒரு பெரிய நன்மைக்குக் காரணமாய் இருப்பாங்க. மம்மியால் உங்களுக்கும் உங்களால் டாடிக்கும் நன்மைகள் ஏற்படும். ஆக மொத்தத்தில் குடும்ப ஒற்றுமை கூடும்
விருச்சிகம்:
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள ஏதாவது கோர்ஸ் இருந்தால் அதில் நீங்க முதலில் ஃபீஸ் கட்டி சேரணும். புலம்பலை நிறுத்துங்க. உங்களால் முடியாமலா போகும். அப்புறம் அசடு வழிய வேண்டாம். இப்பவே நிம்மதியை அதிகரிச்சுக்குங்க. உங்களுக்கு வழிகாட்டி போல் இருக்கும் ஒருவரால் இந்த வருடம் நன்மைகள் அதிகரிக்கும். குறிப்பாக மாணவர்களுக்கு அவரின் வழிகாட்டுதல் பெரிய தூண்டுதலாக இருக்கும். வெற்றிகரமான வருடம் இது. பெரிய பயணங்கள் போகப் போறீங்க. அது அலுவலக ரீதியான பயணமாக இருக்குமானால் அதன் முடிவில் உங்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் சிவப்புக் கம்பளம் விரித்துக் காத்திருக்கும். திருமணத்துக்காகக் காத்திருப்பவர்களுக்கு ஒரு வார்த்தை...இத்தனை வருடங்கள் காத்திருந்தீங்க...இன்னும் கொஞ்சம் காத்திருங்க. மிக நல்ல விதமாக எல்லாமும் நடக்கும்.





No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...