தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் மதுரை உயர்நீதிமன்றக்
கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், நான் எம்.பி.பி.எஸ். படிப்பில் 2010ம்
ஆண்டு சேர்ந்தேன். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதலாமாண்டு தேர்வில்
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் புதிய நடைமுறையை
அறிமுகப்படுத்தியது.
முதலாம் ஆண்டில் அனாடமி, பிசியாலஜி, பயோ-கெமிஸ்ட்ரி ஆகிய 3 பாடங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடத்திலும் 2 விதமாக தேர்வு நடத்தப்படுகிறது. அதாவது ஒவ்வொரு பாடத்திலும் 2 எழுத்துத் தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வுகள் தனித்தனியாக 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
முதலாம் ஆண்டில் அனாடமி, பிசியாலஜி, பயோ-கெமிஸ்ட்ரி ஆகிய 3 பாடங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடத்திலும் 2 விதமாக தேர்வு நடத்தப்படுகிறது. அதாவது ஒவ்வொரு பாடத்திலும் 2 எழுத்துத் தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வுகள் தனித்தனியாக 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
அதேப்போல ஒவ்வொரு பாடத்திற்கும் செய்முறைத் தேர்வு, இன்டர்நெட் தேர்வு,
வாய்மொழித தேர்வு ஆகியவை நடத்தப்படும். இதற்கு 200 மதிப்பெண்கள்
அளிக்கப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும் மொத்தம் 400 மதிப்பெண்களுக்கு தேர்வு
நடைபெறும்.
இதில் அனைத்து தேர்வுகளையும் சேர்த்து சராசரியாக 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும். அதாவது மொத்தமுள்ள 400 மதிப்பெண்களுக்கு 200 மதிப்பெண் பெற்றால் அந்த பாடத்தில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.ஆனால் தற்போதைய புதிய முறைப்படி 2 எழுத்துத தேர்வுகளும், செய்முறைத தேர்வு, வாய்மொழித் தேர்வு, இன்டர்நெல் தேர்வு ஆகியவை தனிததனியாக நடத்தப்படுகின்றன. மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு தேர்விலும் 50 சதவீத மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக கருதப்படுவர் என்று பல்கலை அறிவித்துள்ளது.
5 தேர்வுகளில் ஒரு தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெறாவிட்டாலும் அவர் அந்த பாடப்பிரிவில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்படுவர். இதனால் அந்த மாணவர் அனைத்துத் தேர்வுகளையும் மீண்டும் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் இன்டர்நெல் தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 50 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பல்கலைக்கழகம் நடத்தும் செய்முறைத் தேர்வு, வாய்மொழித் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் என்றும் பல்கலைக்கழகம் நிபந்தனை விதித்துள்ளது.இந்த கடுமையான நிபந்தனைகளால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தோல்வி அடைந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள வேறு எந்த மருத்துவப் பல்கலைக்கழகங்களும் இதுபோன்ற புதிய நடைமுறையை பின்பற்றாத போது தமிழகத்தில் உள்ள மருத்துவ பல்கலைக் கழகம் மட்டும் புதிய நடைமுறையை அமல்படுத்தி இருப்பது பாரபட்சமானது. இந்திய மருத்துவ கவுன்சில் நிபந்தனைகளுக்கு புறம்பானது.எனவே மருத்துவப் பல்கலை பதிவாளரின் புதிய தேர்வு முறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும். என்னை 2ம் ஆண்டு வகுப்பில் சேர்த்துக் கொள்ள அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதேப்போன்று மேலும் 22 மாணவர்கள் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி டி. ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.மனுக்களை விசாரித்த நீதிபதி, மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான புதிய தேர்வு முறைக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும் மனுதாரர்கள் 23 பேரையும் 2ம் ஆண்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment