ஸ்ட்ரெஸ்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அழுத்தம் என்று அறிஞர்கள் கூறுவர்.
ஆங்கில அகராதியில் ‘ஸ்ட்ரெஸ்’ என்பதற்கு இறுக்கும் விசை, சக்தியை உறிஞ்சும்
விசை, ஒரு பொருளின் மீது செலுத்தப்படும் விசை என்ற பொருள்களைத் தருகிறது.
டென்ஷனால் நமது உள்ளம் பல வழிகளில் பாதிப்படைகிறது. எப்பொழுதும் ஒரு
திருப்தியில்லா மனநிலை. கவலை, தவிப்புடன் இருப்பது, போரடித்தல், எளிதில்
கோபம் கொள்ளுதல் ஆகியவை மன அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்புகளாகும்.
ஷாப்பிங் செல்லுங்கள்: மன
அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் ஷாப்பிங் செல்வதன் மூலம் அழுத்தத்தை
சற்று குறைக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். `மனம் சோர்ந்துபோய்
கிடக்கிறதா? `ஷாப்பிங்’ செல்லுங்கள், சந்தோஷம் மனதை நிறைக்கும்’
என்கிறார்கள் அவர்கள். `ஷாப்பிங்கில் உங்களுக்கு நீங்களே
பரிசளித்துக்கொள்ளுங்கள். அது உங்கள் மன நிலையில் நீடித்த ஆக்கப்பூர்வமான
தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட இதுதொடர்பான ஆய்வில், ஷாப்பிங் வந்த
நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் கேள்விகள் கேட்டுப் பதில்கள் பெறப்பட்டன.உற்சாகமான மனநிலை: அத்துடன்,
குறிப்பிட்ட நபர்கள் தங்களின் ஷாப்பிங் பழக்கம், வாங்கிய பொருட்கள்,
அப்போது தங்களுக்கு இருக்கும் மனநிலை பற்றியும் `டைரி’யில் குறித்து
வரும்படி கூறினர். ஷாப்பிங் செல்லும்போது தாங்கள் நல்ல மனநிலையில்
இல்லாவிட்டால், ஏதாவது ஒரு பொருளை பார்த்தவுடன் `ஆசையில்’ வாங்குவது
வழக்கமாக இருக்கிறது என்று சிலர் தெரிவித்தனர்.தங்களின்
சந்தோஷத்துக்காகவே `ஏதாவது’ ஒன்றை வாங்கி வருவதாக 62 சதவீதம் பேரும்,
கொண்டாட்டத்தின் ஒரு வழியாக ஒரு பொருளை வாங்குவதாக 28 சதவிகிதம் பேரும்
கூறினர். ஷாப்பிங்கால் மகிழ்ச்சி அடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும்,
அது ஒருசில எதிர்மறை தாக்கங்களையும் ஏற்படுத்தக்கூடும். தங்கள் ஆய்வில்
பதிலளித்த சிலர் உற்சாகமான மனநிலையில் இருந்தனர் என்பதையும் கவனத்தில்
கொள்ள வேண்டும் என்று முன்ஜாக்கிரதையோடு கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.மன அழுத்தம் குறைக்கும் வாசிப்பு: புத்தகம்
வாசிக்கும் பழக்கம் அதிகம் உள்ளவர்களுக்கு குறைந்த அளவே மன அழுத்தம்
ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்
ஸ்கூல் ஆப் மெடிசின் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை பேராசிரியர் பிரையன்
ப்ரைமேக் தலைமையிலான குழு ஒன்று நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.பதின்பருவத்தை
அடைந்த 106 பேரிடம் 6 முறை இருமாதங்களாக சோதனை நடத்தப்பட்டன. புத்தகங்கள்
அதிகம் வாசிப்போர், குறைவாக புத்தகம் வாசிப்பவர்களுடன் ஒப்பிடும் போது
பத்தில் ஒரு பங்கு அளவே மிக குறைவான மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். எனவே
வாசித்தல் என்பது மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கிறது என்பது
தெரியவந்துள்ளது. எனினும் வாசிப்பதை தவிர்த்து பிற ஊடகங்களிலேயே அதிகமானோர்
கவனத்தை செலுத்துவது தற்போது அதிகரித்துள்ளது என்றும் ப்ரைமேக் தனது
ஆய்வில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment