அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பியரி-ஆன்ட்ரே
'ஃபேட்டர் அட்ராக்ஷன்' என்னும் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். அதில்
பெரும்பாலான பெண்கள், அதிகம் சம்பளம் வாங்கும் ஆண்களாக இருந்தால் போதும்,
அவர்கள் ஓவர் வெயிட்டுடன், குண்டாக இருந்தாலும் அதை பெரிதுபடுத்துவதில்லை
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் 667 அமெரி்க்க தம்பதிகளிடம்
கணக்கெடுப்பு நடத்தினார். அதில் ஆண்களைப் போன்று பெண்களும் தாங்கள் டேட்
செய்ய விரும்பும் நபர் ஸ்லிம்மாகவும், பணக்காரராகவும் இருக்க வேண்டும்
என்று நினைப்பது தெரிய வந்தது. ஆண்களும் சரி, பெண்களும் சரி தனது
வாழ்க்கைத் துணை அழகாகவும், பணம் படைத்தவர்களாகவும் இருப்பதைத் தான்
விரும்புகிறார்கள். அவர்கள் நல்ல உள்ளத்தைப் பார்க்கத் தவறுகின்றனராம்.
ஆண்கள்
தங்கள் உடல் எடை எவ்வளவு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு அதிக சம்பளம் வாங்க
வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர். பர்ஸ் கனமாக இருந்தால் டேட்
செய்யும் ஆள் குண்டாக இருந்தாலும் பரவாயில்லை என்று பெண்கள்
நினைக்கின்றார்களாம். இதற்காக எடை கூடும் போதெல்லாம் அலுவலகத்தில்
சம்பளத்தை உயர்த்தியா கொடுக்க முடியும். முடியாதல்லவா அதனால் ஒழுங்காக உடல்
எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள் என்கிறது அந்த ஆய்வு.
பொண்ணுங்களுக்கு்ததான் எவ்வளவு தாராள மனசு, பாருங்க ....!
No comments:
Post a Comment