|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 April, 2011

ரஜினி - திமுகவுக்கு வாக்களிக்கவில்லை!

தேர்தலில் வாக்களிப்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் வாக்களிக்கலாம். ஆனால் அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம்.

ஆனால் தமிழ் சினிமாவில் உச்ச அந்தஸ்தை 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்துவரும், ஏதோ ஒரு கட்டத்தில் முதல்வர் பதவியில் அமர்ந்துவிடமாட்டாரா என ரசிகர்களால் நம்பப்படும் (இன்னமும்) ரஜினிகாந்த், இந்த விஷயத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சறுக்கியிருக்கிறார்நேற்று அவர் வாக்களித்த போது, எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்ற ரகசியம் அம்பலமாகிவிட்டது. பொதுவாக அவர் வாக்களிக்க வரும்போது, ரசிகர்களை மிஞ்சும் அளவுக்கு மீடியாக்காரர்கள் மொய்த்துக் கொள்வார்கள். நேற்றும் அப்படித்தான் நடந்தது.

அவர் வாக்களிக்கும் இடத்துக்குச் சென்றபோதும் காமிராக்கள் துரத்தின. அவர்களை அப்புறப்படுத்த ரஜினியும் முயற்சிக்கவில்லை. அவருடன் வந்திருந்தவர்களும் முயற்சிக்கவில்லை. இதனால் அவர் எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்பதை அப்படியே தெள்ளத் தெளிவாகப் படம்பிடித்துள்ளனர் புகைப்படக்காரர்களும் தொலைக்காட்சி கேமராமேன்களும். அவர் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை !

ஓட்டுப் போட்ட கையோடு, வாக்குச் சாவடியில் எதுவும் பேசாமல் நேராக வீட்டுக்குப் போனவரை, ஆங்கிலச் சேனல்கள் வாயைப் பிடுங்க, அவரும் ஊழல், விலைவாசி, விவசாயிகள் நலன், அடுத்த முதல்வர் என்றெல்லாம் அடித்துவிட்டார்.

விஷயம் அத்துடன் முடிந்துவிடவில்லை. அதன்பிறகுதான் ஆரம்பித்தது. ரஜினி வாக்களிப்பதை படம் பிடித்தவர்களில் சிலரது ஒளிநாடாக்கள் கோபாலபுரத்துக்கும், முக்கிய தொலைக்காட்சி சேனல்களுக்கும் போய்ச் சேர, ஆட்சி மேலிடம் ஏக அப்செட். இந்த நிலையில், நேற்று மாலையே முதல்வர் கருணாநிதியுடன் பொன்னர் சங்கர் பார்க்க வேண்டிய சூழல் ரஜினிக்கு. ரஜினி ஓட்டுப் போட்ட விவகாரம் முதல்வருக்கு வெட்ட வெளிச்சமாகிவிட்டதால், ரஜினி வருவாரா மாட்டாரா என்று எல்லோரும் காத்திருந்தார்கள். ஒருவழியாக வந்தார். ஆனால் முதல்வருடன் அவரால் சகஜமாக இருக்க முடியவில்லை என்கிறார்கள் முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகள்

ஆட்சியாளர்களிடம் மிகுந்த நெருக்கமாக இருந்த ரஜினியின் இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம், அந்த 'பத்திரிக்கை ஆசிரியரான அரசியல் தரகர்' கம் விமர்சகர்தான் என்றும் உடன் படம் பார்த்தவர்களிடம் கமெண்ட் அடித்தாராம் முதல்வர்!

ஏற்கெனவே 2004ம் ஆண்டு தேர்தலில் பாமக மீதான கோபத்தில், அதிமுக- பாஜக கூட்டணிக்கு வாக்களித்தேன் என வெளிப்படையாகக் கூறி ரஜினி சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்..

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...