மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு, கடந்த, 16ம் தேதி முதல், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகரித்து, அதிகமான மாணவர்கள் மதிப்பெண்களை குவித்ததால், தொழிற்கல்வி படிப்புகளில் சேர, தீவிர ஆர்வம் காட்டினர். குறிப்பாக, பொறியியல் படிப்புகளில் சேர, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்த, 28ம் தேதி நிலவரப்படி, பொறியியல் படிப்பிற்கு, ஒரு லட்சத்து, 59 ஆயிரத்து, 172 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில், 20 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.மருத்துவப் படிப்புகளுக்கு, 22 ஆயிரம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டாக்டர் சீட் கேட்டு, 22 ஆயிரம் பேர் - மருத்துவ படிப்புகளுக்கு, வெறும் 22 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே வினியோகிக்கப்பட்டுள்ளன. .
டாக்டர் சீட் கேட்டு, 22 ஆயிரம் பேர் - மருத்துவ படிப்புகளுக்கு, வெறும் 22 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே வினியோகிக்கப்பட்டுள்ளன. .
No comments:
Post a Comment