திருப்பூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கோவிந்தசாமி. கட்சி விரோத நடவடிக்கை காரணமாக இவரை மார்க்சிஸ்ட் கட்சி தலைமை நீக்கியது. எம்.எல்.ஏ. பதவியில் இருக்கும்போதே திமுகவுக்கு தாவினால், கட்சித்தாவல் தடை சட்டத்தில் பதவி பறிபோகும் என்பதால், எம்.எல்.ஏ. பதவியின் கடைசி காலத்தில் திமுகவுக்கு தாவினார். தமிழக சட்டசபை தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார்.
வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுக வேட்பாளர் ஆனந்தன் தமிழகத்திலேயே மிக அதிகமாக 73,271 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர் ஆனந்த் 1,13,640 ஓட்டுக்களும், அவரை எதிர்த்து போட்டியிட்ட கோவிந்தசாமி 40,369 ஓட்டுக்களும் பெற்றனர். கட்சி தாவிய கோவிந்தசாமிக்கு மக்கள் மரணஅடி கொடுத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள்
No comments:
Post a Comment