|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 May, 2011

இந்தியாவின் முதல் தலித் மில்லியனர்!

இந்தியாவின் முதல் பெரும் பணக்காரர் என்ற பெயரையும், பெருமையும் பெற்றுள்ளார் ராஜேஷ் சரையா. டேராடூனில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ராஜேஷ். ரஷ்யாவில் ஏரோநாட்டிகல் என்ஜீனியரிங் படித்தார். தற்போது உக்ரேனில் வசித்து வருகிறார். அங்கு பல கோடி மதிப்புள்ள ஸ்டீல்மான்ட் பிரைவேட் லிமிட்டெட் என்கிற ஸ்டீல் நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறார்.

சமீபத்தில் டேராடூன் வந்திருந்த ராஜேஷ் கூறுகையில், மக்கள் முதலில் தங்களுக்குள் மாற வேண்டும். கொள்கைகளை மாற்ற வேண்டும். மனநிலையை மாற்ற வேண்டும். உலகைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். நமக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்பதை உணர வேண்டும் என்றார் ராஜேஷ். டேராடூனில் தலித் சிறு தொழிலதிபர்களின் வளர்ச்சி தொடர்பான கருத்தரங்கு நடந்தது. அதில்தான் கலந்து கொண்டு ராஜேஷ் பேசினார்.

அங்கீகரிக்கப்படாத பிரிவுக்கான தேசிய ஆணையத்தின் கணக்குப்படி, 88 சதவீத தலித் மக்கள் ஆதிவாசி மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய்தான் செலவழிக்கிறார்களாம். தலித் மக்கள் சிறுதொழில் பிரிவில் பெரும் பணக்காரர்களாக என்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை அறியும் நோக்கில்தான் இந்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...