|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 May, 2011

பெண் எம்.எல்.ஏக்களினின் எண்ணிக்கை அடியோடு குறைவு

தமிழக சட்டசபையில் கடந்த முறையை விட இந்த முறை பெண் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.

ஆண்டுக்கு ஆண்டு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

2006ல் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது 22 பெண் எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது தற்போது 14 ஆக குறைந்து விட்டது. இவர்களில் ஜெயலலிதாவும் ஒருவர்.

இந்த ஆண்டு அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் 136 பெண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். அவர்களில் 14 பேருக்கு மட்டுமே வெற்றி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், 2006ம் ஆண்டு தேர்தலின்போது 156 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் பெண்களின் பங்கு வெறும் 5 சதவீதம்தான். தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை மொத்தம் 3 பெண்கள்தான் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் - கோகுல இந்திரா, ராஜலட்சுமி மற்றும் பா. வளர்மதி. மூவருமே அதிமுகவைச் சேர்ந்தவர்கள்.

பெரிய கட்சிகளைப் பொறுத்தவரை அதிமுக சார்பில், ஜெயலலிதா உள்பட 9 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இவர்கள் அனைவருமே வென்றுள்ளனர்.

திமுக சார்பில் 11 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு அவர்களில் புஷ்பலீலா ஆல்பன் மட்டுமே வென்றுள்ளார். காங்கிரஸ் சார்பில் நான்கு பேர் நிறுத்தப்பட்டு விஜயதரணி மட்டுமே வென்றுள்ளார். சிபிஎம் சார்பில் பாலபாரதி மட்டும் நிறுத்தப்பட்டு அவர் வெற்றி பெற்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...