அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்களை களங்கப்படுத்தும் உள்நோக்கத்தோடு திட்டமிட்ட செயல்கள் கடந்த ஓரிரு நாட்களாக நடைபெற்று வருகின்றன.பொய்ப்புகார் கொடுப்பதையே வாடிக்கையாக வைத்துள்ள விஜயலட்சுமி என்பவர் கொடுத்த புகாரை வைத்துக்கொண்டு வழக்கினை பதிவு செய்திருக்கிறது காவல் துறை.
கடந்த மூன்றாண்டுகளாக பல மாதங்கள் சிறைப்பட்டும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழர் நலனுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டும், மக்களிடமிருந்தும்,இயக்கத்தினரிடமிருந்தும் எள்ள்ளவும் பிரியாது தொண்டாற்றும் எமது கட்சியின் தலைவரை இனநலனுக்கான போராட்டத்திலிருந்து பின்வாங்கச் செய்யவேண்டும் என்ற உள்நோக்கத்தில் சிலரது தூண்டுதலின் பேரிலே இந்த பொய்ப்புகார் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது
மேலும், அதிகார துஷ்பிரயோகம், ஊழல், முறைகேடு போன்றவற்றின் மூலம் தங்கள் பலத்தைப் பெருக்கிக் கொண்ட சில காட்சி ஊடகங்கள் சீமான் தலைமறைவு, என்கிற பொய்யான செய்தியை வெளியிட்டு எமது பெயருக்கு களங்கம் விளைக்க முயல்கின்றனர்.சீமான் அவர்கள் எங்கும் தலைமறைவாகவில்லை என்பதை தெரிவிப்பதோடு. அவர் எவ்வித விசாரணைக்கும் தயாராகவே உள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது அரசியல் எதிரிகளால், திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பொய்யான புகாரில் எந்த உண்மையும் இல்லை என்பதை சட்டத்தின் முன்பு நிரூபிப்போம். இது போன்ற கீழ்த்தரமான சதிகள் மூலம் தமிழர் நலனுக்கான எமது போராட்டத்தைஎள்ளவும் தளரவைக்கமுடியாது என்பதையும் சதிகாரர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment