இந்தியர்களில் 70 சதவீதம் பேர் தலையில் பொடுகுத் தொல்லையுடன் இருப்பதாக சர்வே ஒன்று தெரிவிக்கிறது. உலகிலேயே மோசமான தலையுடன் இருப்பதும் இந்தியர்கள்தானாம். அதாவது பொடுகுத் தலையுடன் இருப்பது இந்தியர்கள் தான் அதிகமாம்.
யூனிலீவர் நிறுவனத்தின் சார்பில் கிளியர் பாரீஸ் கழகம் என்ற நிறுவனம் நடத்திய சர்வேயில் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது. யூனிலீவர் நிறுவனம் ஷாம்பு தயாரிக்கும் நிறுவனம் என்பதால் இந்தியர்களின் தலையில் தனது தயாரிப்புகளை குவிக்கும் நோக்கில் இந்த சர்வேயை வெளியிட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.
இந்த நிறுவனத்தின் சர்வேயில் கூறப்பட்டுள்ளதாவது...
இந்தியர்களில் 70 சதவீதம் பேருக்கு பேண் மற்றும் பொடுகுத் தொல்லை இருக்கிறது. கடந்த 12 மாதங்களில் நடத்தப்பட்ட சர்வே மூலம் இது தெரிய வந்துள்ளது. அதிலும் 18 முதல் 30 வயது வரை உடையோர்தான் அதிக அளவில் பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் பிரேசில், மெக்ஸிகோ, இந்தியா, ரஷ்யா, ஜெர்மனி, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாட், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 13,000 பேரிடம் இதுதொடர்பாக பேட்டி காணப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

No comments:
Post a Comment