உயிராபத்தை விளைவிக்கும் ஈ – கோலி பக்டீரியா தற்போது ஐரோப்பாவை அலற வைத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பல நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுவிட்டார்கள். ஜேர்மனியில் 16 பேருடைய உயிர்களை காவு கொண்டுவிட்டது. டென்மார்க்கில் 06 பேர் இந்தக் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஈ -கோலி பக்டீரியா மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கும் தொற்றும் என்பது அச்சமூட்டுவதாக உள்ளது. இதனால் பீடிக்கப்பட்டால் வயிற்று நோய் ஏற்படும். சிறு நீரகங்கள் பாதிக்கப்படும். மலத்துடன் 30 வீதம்வரை இரத்தப்போக்கு காணப்படும். நீண்ட கால சுகயீனத்தை ஏற்படுத்தும். அதைவிட முக்கியம் மரணத்திலும் கொண்டு சென்று நிறுத்திவிடும். சிறு நீரகங்களை செயற்பட முடியாது திகைக்க வைக்கும் மோசமான பக்டீரியாவாக உள்ளது.
இதுவரை காலமும் இறைச்சியில் இருந்து ஆரம்பித்த கிருமி தற்போது மரக்கறி வகையில் இருந்து ஆரம்பித்துள்ளது. கொலன்ட்டில் இருந்து வரும் அக்குவக்கா, அத்தோடு தக்காளி, சலாட் போன்றவைகளில் இதன் தாக்கம் இருக்கிறது. டென்மார்க்கில் உள்ள உணவு விற்பனை நிலையங்களில் இருந்து வெளிநாட்டு மரக்கறிகள் அகற்றப்பட்டு வருகின்றன. டென்மார்க் அக்குவக்காவிலும் இந்தக் கிருமி இருக்கிறதா என்ற ஆய்வுகள் தொடங்கிவிட்டன. பறவைக் காய்ச்சலுக்குப் பிறகு உலகத்தை கதிகலங்க வைத்துள்ளது. இந்தக் கிருமி வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார தாபனம் எச்சரித்துள்ளது. ஜேர்மனியில் இதனால் பாதிக்கப்பட்டவரில் 67 வீதமானவர் பெண்களாவர். கூடுதலாக பெரியவர்களையும் பிள்ளைகளையும் இது வேகமாகத் தாக்குகிறது. ஜேர்மனி, டென்மார்க், கொலன்ட், சுவீடன், பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகளில் இது பரவியுள்ளது
No comments:
Post a Comment