அயோடின் உப்பு பயன்படுத்துவதில் தமிழகம் இந்தியாவிலேயே கடைசி இடத்தில்
உள்ளது என தூத்துக்குடியில் உப்பு கமிஷனர் சுந்தரேசன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது, இந்தியாவி்ல் 200 லட்சம் டன் உப்பு ஆண்டுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 55 லட்சம் டன் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. 30லட்சம் முதல் 40 லட்சம் டன் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.400 கோடி அன்னிய செலவாணி கிடைக்கிறது.
மத்திய அரசு இந்தியாவில் 2009ம் ஆண்டு ஒரு பெரிய ஆய்வு மேற்கொண்டது. இதில் மக்கள் தொகையில் 71 சதவீதம் பேர் உணவில் அயோடின் சேர்த்து கொள்கின்றனர் என தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் 50 சதவீதம் பேர் அயோடின் கலக்காத உப்பை உட்கொள்கின்றனர். இந்திய அளவில் அயோடின் உப்பை பயன்படுத்தாத மாநிலங்களில் தமிழகம் கடைசியில் உள்ளது.
2ல் 3 பங்கு குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் இரும்பு சத்து குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு அயோடின் உப்புடன் இரும்பு சத்து ஏற்றப்பட்ட ஈருட்ட உப்பு தயாரித்து வினியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக இரும்பு சத்து கலக்கும் தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதற்கான தொழில்நுட்பம் குறித்து உப்பு உற்பத்தியாளர்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழகம் உப்பு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள தூத்துக்குடியில் நடத்தப்படுகிறது என்றார் அவர்.

No comments:
Post a Comment