அமெரிக்காவில் உயர் கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்கள், விசா மோசடி பல்கலைக் கழகங்களிடம் ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. விசா வழங்குவதில் பல்வேறு தவறுகளைச் செய்துள்ள மற்றொரு அமெரிக்க பல்கலைக்கழகத்தை கண்டுபிடித்திருப்பதன் மூலம், அமெரிக்கா இந்த விஷயத்தில் அதிக கவனத்தை செலுத்தியுள்ளது. ஏற்கனவே இவ்வாறு செய்து வரும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் பற்றி எச்சரிக்கை விடுத்து வருகிறோம். மாணவர்களும் இதுபோன்ற நிறுவனங்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று மாகாணத்தின் செய்தித் தொடர்பாளர் டோனர் கூறினார். விசா மோசடியில் ஈடுபட்ட மற்றொரு பல்கலைக் கழகத்தை வடக்கு விர்ஜினியாவில் கண்டுபிடித்துள்ளோம். இது குறித்து மத்திய அரசிடமும், தொடர்ந்து பேசி வருகிறோம்.
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளும், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் இந்த விஷயத்தில் கவனமாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் பல நல்ல கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயின்று சான்றிதழ்களை பெறுகின்றனர். இந்த ஆண்டும் அது தொடரும். எங்கள் நாட்டிற்கு வரும் இந்திய மாணவர்களை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் செய்தித் தொடர்பாளர் டோனர் கூறினார்.
No comments:
Post a Comment