|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 July, 2011

கோவை: தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது!


.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. உடுமலையை சேர்ந்த சீனிவாசன் என்பவர், கோவை கருமத்தம்பட்டியில் உள்ள காகித மில்லை விலைக்கு வாங்கி நடத்திவந்தார். இந்நிலையில் மில்லை விற்ற நபர், சென்னை தி.நகர் எம்.எல்.ஏ., அன்பழகன் உட்பட 8 பேர் சீனிவாசனை மிரட்டி மில்லை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சீனிவாசன் போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து நள்ளிரவில் தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன் கைது செய்யப்பட்டு உடுமலை அழைத்து வரப்பட்டார். உடுமலை: கைது செய்யப்பட்ட அன்பழகன் எம்.எல்.ஏ.,வை மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்த, மாலை போலீசார் உடுமலைக்கு அழைத்து வந்தனர். 4.15 மணிக்கு உடுமலை அரசு மருத்துவமனையில் அன்பழகனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. தனக்கு சர்க்கரை வியாதி உட்பட பல்வேறு நோய்கள் இருப்பதாகக் கூறி அதற்கான மருத்துவச் சான்றுகளை வழங்கினார்.பின், 4.35 மணிக்கு உடுமலை ஜே.எம்.எண்., 1 மாஜிஸ்திரேட் தீபா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். தனது உடல்நலனை கருத்தில் கொண்டு, சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் என, எம்.எல்.ஏ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்காத மாஜிஸ்திரேட் தீபா, அன்பழகன் எம்.எல்.ஏ.,வை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, கோவை மத்திய சிறைக்கு மாலை 4.50 மணிக்கு அன்பழகன் அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

8 பேர் மீது வழக்குசீனிவாசன் அளித்த புகாரின் பேரில் கிங்ஸ்லி, இவரது மனைவி ஜமீலா, ரவிசாம்ராஜ் இவரது மனைவி மார்ஜினா, ஐயப்பன், சுப்புரத்தினம், சக்சேனா, அன்பழகன் எம்.எல்.ஏ., ஆகியோர் மீது எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...