அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு, ஒரு
பில்லியன் டாலர் (ரூ.4000 கோடி)முதலீட்டில் குஜராத்தில் கார் மற்றும்
என்ஜின் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதில் புதிதாக 5000
பணியிடங்களை உருவாக்க ஃபோர்டு நிறுவனம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக
குஜராத் அரசுடன் ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஆண்டு
இறுதியில் இந்த இரு ஆலைகளுக்கான கட்டுமானப் பணிகள் துவங்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. 2014ம் ஆண்டுக்குள் இவ்விரு ஆலைகளின் பணிகளும்
முழுமையாக நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலைகளில் முதல்
கட்டமாக 240,000 கார்கள் தயாரிக்கப்பட உள்ளதாகவும் அந்நிறுவனம்
தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment