தில்லி ராம்லீலா
மைதானத்தில் கடந்த 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த அண்ணா ஹசாரே 288
மணிநேர உண்ணாவிரதத்துக்குப் பிறகு இன்று தனது உண்ணாவிரதத்தை
முடித்துக்கொண்டார். இதை மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றியாக அவரது ஆதரவாளர்கள் நாடுமுழுதும் கொண்டாடி வருகின்றனர். அண்ணா
ஹசாரேவின் 3 முக்கிய கோரிக்கைகளை ஏற்பதாக நாடாளுமன்றம் நேற்று
அறிவித்ததையடுத்து அவர் இன்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
ஐந்து வயதுடைய சிறுமிகள் இருவர் ஹசாரேவுக்கு இளநீரும், தேனும் வழங்கி அவரது உண்ணாவிரதத்தை முடித்துவைத்ததனர்.
உண்ணாவிரதத்தை முடித்த அண்ணா ஹசாரே, பொதுமக்கள் அளித்த ஆதரவுக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
மேலும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதற்காக ஊடகத்தினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

No comments:
Post a Comment