|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 September, 2011

சென்னை சங்கமம்' நிகழ்ச்சிகளுக்கு அரசு பணம் ரூ.5 கோடி வீண் !

கனிமொழி நடத்திய, "சென்னை சங்கமம்' நிகழ்ச்சிகளுக்கு அரசு பணத்தைச் செலவழித்ததால், ஐந்து கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது,'' என்று சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்தார்.

சட்டசபையில் சுற்றுலாத் துறைக்கான விவாதத்துக்கு, அமைச்சர் கோகுல இந்திரா அளித்த பதில்: "தமிழ் மையம்' ஒருங்கிணைப்பாளர் கனிமொழி, "சென்னை சங்கமம்' என்ற பெயரில் விழா நடத்த ஆதரவு தர வேண்டுமென, தமிழக அரசு 2007ல் அரசாணை வெளியிட்டது. அதன்படி, அரசு நிதியுதவி செய்ய உத்தரவிடப்பட்டது. சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் விளம்பரங்கள், விளம்பரப் பலகை, பத்திரிகைகளில் விளம்பரம், கலைஞர்களுக்கு உழைப்பூதியம் என, சுற்றுலாத் துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு லாபமாகக் கிடைத்த தொகை, கனிமொழியின் விளம்பரத்துக்கு செலவிடப்பட்டது. இவ்வாறு, 2007 முதல் 2011ம் ஆண்டு வரை, ஐந்து கோடி ரூபாய் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. "சங்கமம்' நிகழ்ச்சிக்காக, கிஷ்கிந்தா நிறுவனம் தொப்பிகளை வழங்கவும், ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு ஆடைகள், தொப்பிகள் போன்றவற்றை தயாரித்து வழங்கவும், திரைப்படத் துறையினர் திரையரங்குகளில் இலவச விளம்பரம் செய்யவும் உத்தரவிடப்பட்டது. மகளுக்காக அரசு அதிகாரிகள் மற்றும் அரசு நிதி தவறாக பயன்படுத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் மேடையில், ஜெகத் கஸ்பார் அமர வைக்கப்பட்டார்.

சவுந்திரராஜன் - மார்க்சிஸ்ட்: கனிமொழியைத் தவிர்த்து, ஜெகத் கஸ்பாரை ஒதுக்கிவிட்டு, பாரம்பரிய கலைஞர்களை பயன்படுத்தி, அதே காலத்தில், அரசு சார்பில் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்படுமா?

கோகுல இந்திரா: கடந்த 1994ம் ஆண்டு, முதல்வர் ஜெயலலிதா, கிராமிய கலைஞர் நிதி ஒதுக்கினார். இதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தளர்த்தி தான், கூடுதல் செலவு செய்ய தி.மு.க., அரசு அரசாணை பிறப்பித்தது. ஏற்கனவே உள்ள திட்டம் தொடரும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...