காற்று மண்டலத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா 6 டன் எடையுள்ள ஒரு
செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பியது. கடந்த 1995-ம் ஆண்டு அது செயல்
இழந்தது. அதைத்தொடர்ந்து அந்த செயற்கை கோள்படிப்படியாக பூமியை நோக்கி
நகர்ந்து வந்தது. பின்னர் புவிஈர்ப்பு சக்தி காரணமாக கடந்த சனிக்கிழமை வட
அமெரிக்காவில் வடகிழக்கு பகுதியில் விழுந்தது.
தொடக்கத்தில்
அந்த செயற்கை கோளின் உடைந்து சிதறிய துண்டுகள் கனடாவில் விழுந்ததாக
கூறப்பட்டது. ஆனால் அந்த சிதறல்கள் அங்கு விழவில்லை. எனவே, “நாசா”
விஞ்ஞானிகள் உடைந்த செயற்கை கோள் சிதறல் விழுந்த இடத்தை தற்போது
கணித்துள்ளனர். அதன்படி அவை அமெரிக்க கண்டத்தில் பசிபிக் கடல் பகுதியில்
விழுந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
உடைந்து
சிதறிய சில துண்டுகள் கிறிஸ்துமஸ் தீவில் இருந்து தென் மேற்கில் 420
கி.மீட்டர் தூரத்தில் விழுந்திருக்கலாம். மேலும் உடைந்த 25 துண்டுகள் அதில்
இருந்து 800 கி.மீட்டர் சுற்றளவில் சிதறி கிடக்கலாம் என்றும்
தெரிவித்துள்ளனர். செயற்கைகோளின் உடைந்த உதிரி பாகங்கள் எங்கு விழுந்தது என
சரியாக கண்டுபிடிக்க முடியாமல் நாசா விஞ்ஞானிகள் திணறி வருகின்றனர். எனவே
அவற்றை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment