|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 September, 2011

போலித்தனமான வெற்றிகள் பஞ்சு அருணாசலம்!

தமிழ்சினிமாவில் போலித்தனமான வெற்றிகள் அதிகரித்து விட்டன என்று தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் வேதனையுடன் கூறியுள்ளார். சூப்பர் டீம் சினிமாஸ் தயாரிக்கும் `நந்தா நந்திதா படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பாடல்களை தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் வெளியிட, தயாரிப்பாளர் கேயார் பெற்றுக்கொண்டார்.அதன் பின்னர் பஞ்சு அருணாசலம் பேசிய பேச்சு நச் ரகம். அவர் பேசும்போது, `முன்பெல்லாம் வருடத்துக்கு 60 படங்கள்தான் திரைக்கு வரும். அதில், 30 படங்கள் நஷ்டம் அடையாது. 20 படங்கள் நூறு நாட்கள் ஓடும். 5 படங்கள் வெள்ளிவிழா ஓடும். 5 படங்கள் மட்டும் நஷ்டம் அடையும். ஒரு படம் தயாரிக்க முப்பதாயிரத்தில் இருந்து நாற்பதாயிரம் ரூபாய்தான் ஆகும். முப்பது அல்லது நாற்பது நாட்களில் படம் தயாராகி விடும். ஆனால் இப்போது, வருடத்துக்கு 160 படங்கள் திரைக்கு வருகின்றன. அதில், மூன்று அல்லது நான்கு படங்கள்தான் ஓடுகின்றன. ஒரு படம் தயாரிக்க 80-ல் இருந்து 120 நாட்கள் வரை ஆகிறது. முன்பு திறமைக்கு மதிப்பு இருந்தது. இப்போது பணத்துக்குத்தான் மதிப்பு இருக்கிறது. பணத்தை வைத்துதான் வெற்றி நிர்ணயம் செய்யப்படுகிறது. போலித்தனமான வெற்றிகள் அதிகமாகி விட்டன. `அன்னக்கிளி படத்துக்கு இசையமைக்க இளையராஜாவுக்கு நான் கொடுத்த சம்பளம் வெறும் மூவாயிரத்து ஒன்றுதான். அவர், 100 படங்களுக்கு இசையமைத்த பின்புதான் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினார். ஆனால் இப்போது, படம் இரண்டு வாரம் ஓடி கொஞ்சம் வசூல் செய்தால் போதும். அந்த படத்தின் கதாநாயகன், கதாநாயகி, டைரக்டர் தங்களின் அடுத்த படத்துக்கு 75 லட்சத்தில் இருந்து 80 லட்சம் வரை சம்பளம் கேட்கிறார்கள். யார் திறமைசாலி என்பதில் பயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் வேதனையுடன் கூறியுள்ளார் ஷிவா நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...