கேள்வி: நிதி அமைச்சகத்தின் குறிப்பு தொடர்பாக, நேற்று(நேற்று
முன்தினம்) நடந்த பேச்சுவார்த்தையில், உங்களுக்கு வெற்றி கிடைத்ததா, நிதி
அமைச்சர் பிரணாபுக்கு வெற்றி கிடைத்ததா?
பதில்: இதை என்னால், சரியாக நினைவுகூர முடியவில்லை.
கே: இந்த சர்ச்சை காரணமாக, உங்கள் பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்தீர்களா?
ப: எனக்கு சற்று ஞாபக மறதி உள்ளது.
கே: பதவியை ராஜினாமா செய்ய, எத்தனை முறை விருப்பம் தெரிவித்தீர்கள்?
ப:
ஞாபக மறதியுடன், கணக்கிடுவதிலும், எனக்கு பிரச்னை உள்ளது.நிதி அமைச்சக
குறிப்பு குறித்து, இதுபோல் பல வடிவங்களில் கேள்விகள் கேட்டபோதும்,
அதுபற்றிய கேள்விகளுக்கு பதில் அளிப்பதை, அமைச்சர் சிதம்பரம் தவிர்த்தார்.
உள்துறை அமைச்சரின் பேட்டியின் சுருக்கம்:
* பாகிஸ்தான் உளவு
அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாக,
அமெரிக்கா மிகவும் தாமதமாகக் கண்டுபிடித்துள்ளது. இது, எங்களுக்கு
ஆச்சர்யம் அளிக்கவில்லை. ஐ.எஸ்.ஐ.,க்கு, பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு
உள்ளது என, எங்களுக்கு எப்போதும் தெரியும்.
* மும்பை குண்டு
வெடிப்புக்குக் காரணமான, தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் உள்ளது குறித்து,
அந்த நாட்டு அரசிடம் பல முறை கேள்வி எழுப்பியுள்ளோம். ஆனால், அவர்கள் அதை
மறுத்து விட்டனர்.
* அத்வானி மேற்கொள்ளும் ரத யாத்திரைக்கு, பாதுகாப்பு அளிக்கும்படி கோரிக்கை விடுத்தால், அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
*மும்பை,
டில்லியில், சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பு குறித்த விசாரணையில்,
முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், குற்றவாளிகள் யார் என்பது, இன்னும்
உறுதிப்படுத்தப்படவில்லை.
* தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்காக,
"பயோமெட்ரிக்' கணக்கெடுப்பு முறையை, யார் மேற்கொள்வது என்பது குறித்து,
விரைவில் முடிவு செய்யப்படும்.
*தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள,
அப்சல் குருவின் கருணை மனு தொடர்பாக, ஜனாதிபதி பிரதிபா, இன்னும் முடிவு
எடுக்கவில்லை.இவ்வாறு, அமைச்சர் சிதம்பரம் பேட்டியில் கூறினார்.
No comments:
Post a Comment