ஸ்மார்ட்போன் விற்பனையில் அதன் தாய் நிறுவனமான
ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி, சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் கோ
நிறுவனம் முன்னணியில் உள்ளது. தொழில்நுட்ப விரிவாக்கம் உள்ளிட்ட பல
பிரிவுகளில், ஆப்பிள் நிறுவனத்திற்கும், சாம்சங் நிறுவனத்திற்கும் இடையே
நடைபெற்ற போட்டியில் சாம்சங் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது என்றே கூறலாம்.
இதுகுறி்த்து, லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி சர்வதேச அளவில்
கருத்துக்கணிப்பை நடத்தி வரும் ஸ்ட்ரேட்டஜி அனாலிடிக்ஸ் நிறுவனம்
வெளியிட்டுள்ள மின்-அஞ்சல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த
நிதியாண்டின் நான்காம் மற்றும் இறுதி காலாண்டில், சாம்சங் நிறுவனம், 27.8
மில்லியன் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ளதாகவும், இது சர்வதேச அளவில்,
23.8 சதவீதம் என்றும், ஆப்பிள் நிறுவனம் 17.1 மில்லியன் ஸ்மார்ட்போன்களை
விற்பனை செய்துள்ளதாகவும், இது சதவீதத்தின் அடிப்படையில் 14.6 சதவீதம்
என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத துவக்கத்தில், ஆப்பிள்
நிறுவனம் ஐபோன் 4எஸ்ஸை அறிமுகப்படுத்தியது. அந்த ஒரு காலாண்டில் மட்டும்
விற்பனையின் உச்சத்தில் ஆப்பிள் நிறுவனம் இருந்தது. அதனைத் தொடர்ந்து,
நோக்கியா நிறுவனம், எஸ்பூ ஸ்மார்ட்போனையும், கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டை
அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட்போன்களையும், சாம்சங் நிறுவனம், கேலக்ஸி
ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களை அறிமுகப்படுத்தியது. முன்னணி
நிறுவனங்கள், தொடர்ந்து புதுமைகளை அறிமுகப்படுத்திய வண்ணம்
இருந்தபோதிலும், சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் மற்றும்
டேப்லெட்களின் விற்பனை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்தது. சர்வதேச அளவில்,
அனைத்து பிரிவுகளிலும் பயன்படும் வகையில், எளிதாகவும் அதேசமயம் மிக
விரைவாகவும் செயல்படும் வகையில், கேலக்ஸி மற்றும் டேப்லெட் பிசிக்கள்
உள்ளதன் காரணத்தினாலேயே இதன் விற்பனை அமோகமாக உள்ளதாக சீனாவின் பீஜிங்கை
தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஐடீசி ஆய்வு மையத்தின் உயர் அதிகாரி
டி.இசட். வாங் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சாம்சங்
நிறுவன ஸ்மார்ட்போன்கள் விற்பனை 44 சதவீதம் அதிகரித்து 117 மில்லியன் என்ற
அளவில் உள்ளதாகவும், அதேசமயத்தில், கடந்த ஆண்டில் 32.7 சதவீதமாக இருந்த
நோக்கியா ஸ்மார்ட்போன்களளின் விற்பனை, நடப்பு ஆண்டில் 14.4 சதவீதமாக
குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment