|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 October, 2011

குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடுன்னு நச்சரிக்காதீங்க!


குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று கட்டாயப்படுத்தினால் அவர்கள் வழக்கமாக உண்ணும் அளவை விட குறைவகாகவே சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா மற்றும் அப்பலாச்சியன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளின் உணவு பழக்க, வழக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் கலந்து கொண்ட 4 வயது குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் சாப்பிடச் சொல்லி நச்சரிகத்ததால் வழக்கமாக அவர்கள் சாப்பிடும் அளவைவிட குறைவாகவே சாப்பிட்டுள்ளனர்.

குழந்தைகளை நச்சரிப்பதால் அவர்களுக்கு உணவு மீது வெறுப்பு வருகிறது. அதனால் அவர்கள் குறைவாக சாப்பிடுகின்றனர். அவ்வாறு குறைவாக சாப்பிட்டால் அவர்களின் உடல் நலம் தான் கெடும். பெற்றோர்கள் நச்சரிக்காமல் இருந்தால் அவர்களுக்கு சாப்பிட்டு பழக்கம் இல்லாத உணவைக் கொடுத்தாலும் அவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள் என்று அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

குழந்தைகள் மனநல மருத்துவர் ரிச்சர்ட் உல்ப்சன் கூறுகையில், குழந்தைகளை சாப்பிடச் சொல்லி நச்சரிக்கவும் கூடாது. அதே சமயம் அவர்களாகவே சாப்பிடட்டும் என்று விட்டுவிடவும் கூடாது. அன்பாகக் கூறினால் அவர்கள் கேட்டுக்கொள்வார்கள் என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...