கிரெடிட் கார்டுகள்' மூலமாக லட்சக்கணக்கில் கொள்ளையடித்த நூதன
கொள்ளையர்கள், சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தொழில்நுட்பத்தை
பயன்படுத்தி இவர்கள் கொள்ளையடிப்பதாலும், மேலும் பல புகார் இருப்பதாலும்
பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
"கிரெடிட், டெபிட் கார்டுகளை' பயன்படுத்தும்போது, அதில் இருக்கும்
விவரங்களை திருட நினைப்பவர்கள், கூடவே கையில் சிறியதாக வைத்திருக்கும்,
"ஸ்கிம்மர்' என்ற இயந்திரத்திலும் தேய்த்து விட்டு திருப்பிக் கொடுத்து
விடுவர்.
அதே போல், ஏ.டி.எம்., மையங்களிலும், கார்டு தேய்க்கும் இடத்தில்,
சிறிய அளவிலான "ஸ்கிம்மர்' தகடு ஒன்றைப் பொருத்தி வைத்து, அதன் மூலம் தகவல்
திரட்டப்படுகிறது. நம்முடைய, "பின்' எண்ணைப் படிக்க, ஒரு கேமரா பொருத்தி,
கையசைவை வைத்து, எண்ணையும் அறிந்து கொள்கின்றனர். இவ்வாறு சேகரித்த
தகவல்களை, பழைய கார்டுகளில் புகுத்தி பணம் கொள்ளையடிக்கப் படுகிறது.
சில தினங்களுக்கு முன், போலி கிரெடிட் கார்டு மோசடியில், சென்னை
கோவிலம்பாக்கத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஏற்கனவே இது
போன்ற பல வழக்குகளில் சிக்கி, சிறை சென்று வந்துள்ளனர். போலி கிரெடிட்
கார்டு தொடர்பாக மேலும் 64 புகார்கள் விசாரணையில் உள்ளதால், ஏ.டி.எம்.,
கார்டை பயன்படுத்துவர்கள், உஷாராக இருப்பது நல்லது.
No comments:
Post a Comment