முல்லை பெரியாறு அணையை கட்டி பென்னிகுக்கிற்கு லோயர்கேம்ப் பகுதியில் சிலையுடனான் மணிமண்டபம் அமைக்க தமிழ்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். லோயர் கேம்ப் பகுதியில் மின்சார வாரியத்திற்கு சொந்தமான 2500 சதுரடி பரப்பளவில் சுமார் ரூ.1 கோடி செலவில் இந்த மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மணிமண்டப திறப்பு விழாவிற்கு பென்னிகுக்கின் பேரன் அழைக்கப்படுவார் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
யார் பென்னிகுக்: முல்லை பெரியாறு அணை கட்டிய இன்ஜியரான பென்னிகுக்,116 ஆண்டுகளுக்கு முன் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பகுதியில் தனது சொந்த பணத்தை செலவு செய்து இந்த அணை கட்டி உள்ளார். பல்வேறு இடையூறுகளை கடந்து தனது சொத்துக்கள் குஅனைத்தையும் விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு பென்னிகுக் முல்லை பெரியாறு அணையை கட்டி உள்ளார். 116 ஆண்டுகளுக்கு முன்னரே புவியூர்ப்பு விசை, தட்பவெப்ப நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு கருங்கற்களால் இந்த அணை கட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment