|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 January, 2012

தைப்பூச திருவிழா துவங்குகிறது...

முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூச திருவிழா. இத் திருவிழாவிற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழநி வருவது வழக்கம். 10 நாட்கள் நடைபெறும் இந்த தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கொடியேற்றத்தையொட்டி காலை 9.15 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமார சுவாமி கொடி கட்டி மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் மேஷ லக்கினத்தில் கொடியேற்றப்படும்.

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமார சுவாமி புதுச்சேரி சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை உள்ளிட்ட வாகனங்களில் ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் ஆறாம் நாள் திருவிழாவாக 6ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் சிம்ம லக்கனத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். தொடர்ந்து 8.30 மணிக்கு வெள்ளி ரதத்தில் ரத வீதிகளில் சுவாமி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 7ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமார சுவாமி தோளுக்கு இனியாளுடன் சண்முக நதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் மேஷ லக்கனத்தில் தேரேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு தந்த பல்லக்கு தேர் கால் பார்த்தல் நிகழ்சசியும் நடைபெறும். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...