அறிவியல் துறையில் இந்தியாவை சீனா மிஞ்சிவிட்டது என பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புக்கொண்டுள்ளார். ஒரிசாவில் அறிவியல் மாநாட்டில் பேசும்போது அவர் இதைத் தெரிவித்தார். சீனாவுடன் போட்டிபோட வேண்டுமானால் அறிவியில் துறையில் பெரிய அளவில் முதலீடு செய்வது அவசியம் என பிரதமர் குறிப்பிட்டார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில்(ஜிடிபி) ஒதுக்கீடு விகிதம் மிகவும் குறைவாகவும், மந்தமாகவும் உள்ளது என அவர் கூறினார். கடந்த பல ஆண்டுகளாக அறிவியல் துறையில் இந்தியாவின் நிலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. சீனா போன்ற நாடுகள் நம்மை முந்தி வருகின்றன. இந்த நிலையை மாற்ற வேண்டியது அவசியம் என்றார் அவர். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக செலவிடப்படும் 1 சதவீத ஜிடிபி 12-வது திட்டத்தின் முடிவுக்குள் 2 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கம் என மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment