ரோம் நாட்டில் உள்ள வாடிகன் நகரத்தில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கான 3 நாள் சிறப்புக்கூட்டம் நடந்தது. இதில் போப் ஆண்டவர் ஜான் பெனடிக்ஸ் கலந்து கொண்டு அப்போது அவர், ‘’உலகம் முழுவதும் தற்போது குழந்தை இல்லாத தம்பதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருமணமான பிறகு தங்கள் நினைக்கும் நேரத்தில் குழந்தை பெற வேண்டும் என்று குழந்தை பிறப்பை தள்ளிப்போடுகிறார்கள். ஆனால் அவர்கள் குழந்தை பெற நினைக்கும் போது கருச்சிதைவு ஏற்படுகிறது. இதனால் மனம் உடைந்து போகும் அவர்கள் உடலுறவு மூலம் குழந்தை பெற முயற்சி செய்வதில்லை.உடனே அவர்கள் குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்களிடம் சென்று செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற முயற்சிக்கிறார்கள்.
டாக்டர்களும் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு வேறு ஒரு பெண்ணின் கரு மூட்டையை பயன்படுத்தி செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தையை உருவாக்குகிறார்கள். சிலர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. செயற்கை கருத்தரிப்பு கடவுளின் படைப்புக்கு விரோதமானது. எனவே அதை உலகம் முழுவதிலும் தடை செய்ய வேண்டும். குழந்தையின்மைக்கான பரிசோதனைகளை செய்து குறைபாட்டை நீக்கலாம். ஆனால் செயற்கை கருத்தரிப்பை கிறிஸ்தவர்கள் ஆதரிக்கக்கூடாது. செயற்கையான முறையில் குழந்தைகளை உருவாக்கும் முறையை ஒழிக்கவேண்டும்’’என்று கூறினார்.
No comments:
Post a Comment