இந்தியில் விடுதலைப்புலிகளை மையப்படுத்தி புதுப்படம் தயாராகிறது. சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமான சண்டை, ஈழப் போராட்டம், விடுதலைப் புலிகளின் யுத்த நடவடிக்கைகள் போன்றவை இதில் காட்சிபடுத்தப்படுகின்றன. இதில் கதாநாயகனாக ஜான் ஆபிரகாம் நடிக்கிறார். அவரே தயாரிக்கவும் செய்கிறார். ஜாப்னா என படத்துக்கு பெயரிட்டுள்ளனர். போரில் ஒரு விடுதலைப் புலி சந்தித்த நிகழ்வுகள், பட்ட கஷ்டங்கள் போன்றவற்றை திரைக்கதையாக தொகுத் துள்ளனர். இப்படத்தை ஜோசித் சிர்கார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே காஷ்மீர் பிரச்சினையை வைத்து ‘யாஹன்’ என்ற படத்தை எடுத்து வெளியிட்டார். விடுதலைப்புலிகள் பற்றிய ‘ஜப்னா’ படம் அரசியல் திரில்லர் கதையாக உருவாகிறது என்று தெரிவித்துள்ளார் அவர்.
No comments:
Post a Comment