ஊழலுக்கு எதிராக மக்கள் கோபம் அதிகரித்து வருவதாக மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையர் பிரதீப் குமார் கூறியுள்ளார். இது குறித்து பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது: ஊழல் மற்றும் முறைகேடு, புற்றுநோய் போல், நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளது. இதனால் ஊழலுக்கு எதிராக மக்கள் கோபம் அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் மக்கள் பொறுமை இழக்கின்றனர். ஊழலால் ஏழை மக்கள் நேரிடையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறினார்.
No comments:
Post a Comment