விழிப்புணர்வு காரணமாக போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை ஒழிக்க மத்திய அரசு விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதன் எதிரொலியாக நாட்டிலிருந்து போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டது. மேலும், உலக சுகாதார நிறுவனத்தின் போலியோ பாதிப்புள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு மற்றும் மக்களின் ஒத்துழைப்பு மூலமே இந்த வெற்றி பெற முடிந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment