ஃபேஸ்புக் இருந்தால் அனைத்தும் சாத்தியம்தான் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆம், ஃபேஸ்புக் தற்போது ரயில்களில் இடவசதி மற்றும் ரயில்களின் கால அட்டவணை குறித்த விபரங்கள் பற்றிய சேவையை வழங்க உள்ளது.
பயனீட்டாளர்களுக்கு ஃபேஸ்புக் நித்தமும் புதிய வசதிகளை கொடுத்த வண்ணம் இருக்கிறது. இப்பொழுது டெல்லி ரயில்வே ஃபேஸ்புக்கில் இணைய உள்ளது. இதனால் ரயில் டிக்கெட், இடவசதி குறித்த விபரங்கள், ரயில்களின் புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரம் குறித்த கால அட்டவணை உள்ளிட்ட ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் இனி ஃபேஸ்புக் மூலம் அறிந்து கொள்ளலாம்..தேசிய ரயில்வே விசாரணை சேவை வசதியுடன் ஃபேஸ்புக் இணைக்கப்பட இருப்பதாக டெல்லி ரயில்வே துறையின் மூத்த உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக் வசதி இப்பொழுது நிறைய மொபைல்களிலேயே வழங்கப்படுகிறது.
இதனால், ரயில் பயணிகள் இனி தங்களது மொபைலில் இருந்தே ஃபேஸ்புக் மூலம் அனைத்து ரயில்வே விபரங்களையும் தெரிந்துகொள்ளலாம் என்று டெல்லி ரயில்வே தெரிவித்துள்ளது.கையில் வைத்திருக்கும் மொபைலில் ஃபேஸ்புக் வசதி இருந்தால் போதும். இதில் ரயில் வருகையில் இருந்து அனைத்து விதமான தகவல்களையும் எளிதாக பெறலாம். இதில் ரயில் வந்து நிற்கும் ப்ளாட்ஃபார்ம் நம்பர் முதல் கொண்டு சரியாக பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment