அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு தொடர்பான நிகழ்ச்சிக்கு இந்தியாவின் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த வந்தனா சூர்யவன்ஷி என்ற ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதன் மூலம், இந்த ஆய்வு திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வெளிநாட்டவர், முதல் இந்தியர் என்ற பெருமையை வந்தனா சூரியவன்ஷி பெற்றுள்ளார்.வித்யாவேலி பள்ளி எனும் நடுநிலைப் பள்ளியில் உயிரியல், புவி இயல் மற்றும் பொது அறிவியல் பாடங்களை கடந்த 20 ஆண்டுகளாக கற்பித்து வருகிறார் .தற்போது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் விண்வெளி மற்றும் அறிவியல் சார் பாடங்களை மற்ற 19 பேருடன் சேர்ந்து இவரும் கற்றுக் கொடுக்க உள்ளார்.அமெரிக்க விண்வெளி அறக்கட்டளை சார்பில் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக இந்நிகழ்ச்சி திட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
விண்வெளியை மையமாகக் கொண்ட கல்வி மற்றும் விண்வெளி அறக்கட்டளை நிறுவனம் வழங்கும் பயிற்சிகள் 20 கல்வியாளர்களுக்கு அளிக்கப்படும். இவர்கள் மட்டுமல்லாமல் விண்வெளி மையத்தில் பணியாற்றியவர்கள், ராணுவத்தில் பணியாற்றியவர்கள் என 270 பேர் இந்த ஆய்வுக்காக பணியாற்ற உள்ளனர். விண்வெளி பற்றிய ஆராய்ச்சி படிப்புகளை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பது குறித்த ஆய்வுக்காக இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு விண்வெளித் துறையில் பயிற்சிகளும், படிப்புகளும், கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்க உள்ளது.கொலராடோவில் ஏப்ரல் 16 முதல் 19 வரை நடைபெறும் விண்வெளி அறக்கட்டளையின் 28 வது தேசிய விண்வெளி கருத்தரங்கில் இவர்கள் சிறப்பிக்கப்பட உள்ளனர். மேலும் கருத்தரங்கத்திற்கு பின்னர் நாசாவின் பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் இவர்களுக்கு கிடைக்கும்
No comments:
Post a Comment