ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் தரவரிசையில் முதல் 10 பேரில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. பேட்ஸ்மேன்களின் வரிசையில் 12வது நபராக சச்சின் இடம் பெற்றுள்ளார்.சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) சார்பில் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. டெஸ்ட் போட்டிகளின் பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் உள்ளார். அவரை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் டி.வில்லியம்ஸ், காலீஸ் ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.வெளிநாட்டு மண்ணில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணியில் உள்ள வீரர்கள் டெஸ்ட் தரவரிசையில் பின்தங்கி உள்ளனர். இதனால் டெஸ்ட் தரவரிசையில் இடம் பெற்றுள்ள முதல் இந்திய வீரரான சச்சின் 12வது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்ததாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்ற டிராவிட் 19வது இடத்தில் உள்ளார்.பட்டியலில் 23வது இடத்தில் லட்சுமணனும், 25வது இடத்தில் அதிரடி வீரர் ஷேவாக்கும் உள்ளனர். கேப்டன் டோணி 43வது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதலிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெய்ன் நீடிக்கிறார். 2வது இடத்தில் பாகிஸ்தானின் சமீது அஜ்மல் உள்ளார். பந்துவீச்சாளர்களின் பட்டியிலும் டாப்-10 வீரர்களில் இந்தியர்கள் யாரும் இடம் பெறவில்லை. பட்டியில் உள்ள முதல் இந்தியராக 12வது இடத்தில் ஜாகிர்கான் உள்ளார். அதன்பிறகு 20வது இடத்தில் ஓஜா உள்ளார்.இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ஹர்பஜன்சிங் 23வது இடத்திலும், இஷாந்த் சர்மா 28வது இடத்திலும் உள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் ஆல்-ரவுண்டர்களுக்காக பட்டியலின் டாப்-10 வீரர்களிலும் இந்தியர்கள் யாரும் இல்லை.இந்திய அணி சரியுமா? அணிகளுக்கான தரவரிசையில் தற்போது 3வது இடத்தில் இந்தியா உள்ளது. ஆனால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவின் வெற்றி தொடரும் பட்சத்தில் இந்தியா 4வது இடத்திற்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment