இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடை பெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி அதிர்ச்சிகரமாக வங்காளதேசத்திடம் தோற்றது. இந்திய அணி 289 ரன் குவித்தும் வெற்றி பெற முடியாமல் போனது ஏமாற்றமே.
வங்காள தேசத்திடம் ஏற்பட்ட தோல்வியால் இந்திய அணி நெருக்கடியில் உள்ளது. ஆசிய கோப்பை போட்டியின் 5-வது லீக் ஆட்டம் டாக்காவில் நாளை நடக்கிறது. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
வங்காள தேசத்திடம் ஏற்பட்ட தோல்வியால் இந்திய அணி நெருக்கடியில் உள்ளது. ஆசிய கோப்பை போட்டியின் 5-வது லீக் ஆட்டம் டாக்காவில் நாளை நடக்கிறது. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
பாகிஸ்தான் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இலங்கைக்கு எதிராக போனஸ் புள்ளியுடன் அந்த அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.இந்திய அணி நாளைய ஆட்டத்தில் 2-வதாக பேட்டிங் செய்து குறிப்பிட்ட ஓவரில் இலக்கை எடுத்தால் போனஸ் புள்ளியுடன் வெற்றி பெற முடியும். பாகிஸ்தான் அணி தற்போது நல்ல நிலையில் இருப்பதால் அதற்கு ஏற்ற வகையில் இந்திய அணி சிறப்பாக ஆட வேண்டும். உலக கோப்பை அரை இறுதியில் தோற்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. தூர்தர்சன், நியோ கிரிக்கெட் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment