உலகிலேயே செல்போன் அதிக அளவில் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருந்து வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுப்படி நம்நாட்டில் 90 கோடி பேரிடம் செல்போன் உள்ளது. அவற்றில் 10 சதவீதம் பேர் மட்டுமே போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களாக உள்ளனர். 90 சதவீதம் பேர் பிரீபெய்டு வாடிக்கையாளர்களாக உள்ளனர்.இந்நிலையில் இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் செல்போன் பிரீபெய்டு ரீசார்ஜ் செய்வதற்கான பிராசசிங் கட்டணத்தை திடீரென உயர்த்தி உள்ளது. இதுவரை ரூ.20 க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் பிரீபெய்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து தொலைத்தொடர்பு ஆணையம் ரூ.2 பிராசசிங் கட்டணம் வசூலித்தது. தற்போது அதை ரூ.3 ஆக உயர்த்தி உள்ளது.இந்த பிராசசிங் கட்டண உயர்வு காரணமாக செல்போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் இனி ரூ.20 க்கு மேல் டாப் அப் ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக ரூ.1 செலுத்த வேண்டும். ரூ.10 க்கு ரீசார்ஜ் செய்பவர்கள் கூடுதலாக கட்டணம் செலுத்த தேவை இல்லை.மேற்கண்ட தகவல் தொலைத்தொடர்பு ஆணைய செய்திக்குறிப்பில்
No comments:
Post a Comment