போலி ஆயுத பேரத்தில் பங்காரு லட்சுமணனுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்த டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி கன்வல் ஜீத் அரோரா, ஊழலுக்கு எதிரான தனது கருத்துக்களை ஆவேசமாக, ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார்.தீர்ப்பில் அவர், "ஊழல் என்பது விபசாரத்தை விட மோசமானது. விபசாரம் என்பது தனிமனித ஒழுக்கத்தைத்தான் பாதிக்கிறது. ஆனால் ஊழலானது ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒரே அளவில் சீரழித்து விடுகிறது. நாட்டுக்கு ஊழல் பகை. மனிதர்களை இது கோபத்துக்கு ஆளாக்குகிறது'' என கூறி உள்ளார்.மேலும் அவர் ஊழல் பற்றி குறிப்பிடுகையில், " பிரச்சினை என்னவென்றால், இந்தச் சமூகம் ஊழலுக்கு எதிராக வெளிப்படையாக குரல் கொடுக்கிறது. ஆனால் தனிப்பட்ட முறையில் அதில் ஈடுபடுகிறது. எனவே உண்மையிலேயே ஊழலற்ற ஒரு சமூகத்தை காண நாம் விரும்புகிறோமா என்ற கேள்வியை நம்மை நாம் கேட்க வேண்டிய தேவை எழுந்து உள்ளது'' என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment