கடந்த 20 ஆண்டுகளில், காஷ்மீரில் ஆயுதப் பயிற்சி பெறச் சென்ற 109 பேர், ஜம்மு - காஷ்மீர் மாநில அரசு அறிவித்த மறுவாழ்வு கொள்கையால், அமைதியாக வீடு திரும்பியுள்ளனர்.இதுதொடர்பாக, உளவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஜம்மு - காஷ்மீரில் உள்ள முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான அரசு, 2010 நவம்பரில், மறுவாழ்வுக் கொள்கை ஒன்றை, மத்திய அரசின் ஒப்புதலு<டன் அறிவித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு, ஆயுதப் பயிற்சிக்காக சென்றிருந்த, 1,300 வாலிபர்கள், தாங்கள் வன்முறைப் பாதையைக் கைவிட்டு, மாமூல் வாழ்க்கைக்கு திரும்ப விரும்புவதாக, பல்வேறு வழிகளில் தகவல் தெரிவித்தனர்.இவர்களில், 109 பேர், பல்வேறு வழிகளில் அமைதியாக வீடு திரும்பியுள்ளனர். அவர்களைப் பற்றிய விவரங்களை வெளியிட்டால், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், விவரங்களை தெரிவிக்க முடியாது.இருந்தாலும், இவர்களில் பெரும்பாலானவர்கள் நேபாளம் வழியாக, இந்தியா திரும்பியுள்ளனர். பாகிஸ்தான் பாஸ்போர்ட்டில் நேபாளம் சென்ற அவர்கள், அங்கிருந்து இந்திய குடிமகன் என்ற பெயரில், நாடு திரும்பியுள்ளனர். இந்தியர்கள், நேபாளம் சென்று வர, பாஸ்போர்ட் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு, உளவுத் துறை அதிகாரி கூறினார்.
No comments:
Post a Comment