ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
17 May, 2012
கர்ப்பிணிகள் மரணம் இந்தியாவில் தான் அதிகம்!
தற்போது ஐக்கிய நாடுகள் நடத்திய ஆய்வில் உலகிலேயே இந்தியாவில் தான் கர்ப்பிணிகள் அதிகம் மரணம் அடைகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. பெண்களின் கல்வியறிவு அதிகரிப்பு மற்றும் சுகாதாரத்திட்டம் போன்றவற்றால் முன்னணியில் இருக்கும் இந்தியாவில் கற்பம் அடைந்த பெண்கள் அதிகம் மரணமடைகின்றனர் என்று தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையில் உலக அளவில் 2,87,000 பெண்கள் கற்பகாலத்தின் போதும், குழந்தைபெரும் போதும் மரணமடைவதாக 2010ம் ஆண்டு கணக்கீட்டின்படி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்போது 19% மரணம் இந்தியாவிலும், 14% மரணம் நைஜீரியாவிலும் மற்றும் இதர 8 நாடுகளில் 40% மரணமும் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment