ஆலங்குடியில் வரும் 17ம் தேதி நடைபெறும் குரு பெயர்ச்சி விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேவுள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. நந்தன வருடத்தில், வைகாசி மாதம் 4ம் தேதி வியாழக்கிழமை (17 -05- 2012) இரவு 6.27 மணிக்கு கார்த்திகை நட்சத்திரம் 2ம் பாதத்தில் குரு பகவான் ரிஷப ராசியில் சஞ்சரிக்கப்போகின்றார்.இந்த குரு பெயர்ச்சியை முன்னிட்டு தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள்.அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது, தடையில்லா மின்சாரம் வழங்குவது, கோவில் முன்பு தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், ஆலய வளாகத்தில் தற்காலிக மருத்துவ முகாம் அமைத்து 24 மணி நேரமும் மருத்துவர்கள் குழு இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கவும், சாலை வசதி, தற்காலிக கழிப்பிட வசதி செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த வசதிகளில் குறைபாடு ஏதும் இருப்பின் பொது மக்கள் திருவாரூர் மாவட்ட கலெக்டர் நடராஜனிடம் கீழ் கண்ட தொலை பேசி எண்களில் 04366 - 223344, 224738, 225142 முறையிடலாம்.

No comments:
Post a Comment