|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 June, 2012

12 புதிய ரயில்கள் தமிழகத்திற்கு ...


நெல்லை- மும்பை, சென்னை- பெங்களூருஇரட்டை மாடி ரயில் என  தமிழகத்திற்கு 12 புதிய ரயில்கள்களை தென்னக ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. தென்னக ரயில்வேயின் புதிய ரெயில்வே கால அட்டவணை சென்னையில் இன்று  வெளியிடப்பட்டது. அதில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரயில்கள், புறப்படும்,  வரும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில்கள், விரிவு செய்யப்பட்டுள்ள ரயில்கள்  மற்றும் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் ரயில்கள் விவரம்  அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரயில்களின் வேகம் அதிகரிப்பு, புதிய பாசஞ்சர் ரயில், மின்சார ரயில்  சேவைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த தகவல் தெற்கு ரயில்வே இணைய தளத்திலும்  வெளியிடப்பட்டுள்ளன.இதில் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள 12 புதிய ரெயில்கள் விவரம் வருமாறு:
 
1. பைகானூர்- கோயம்புத்தூர் வாராந்திர சூப்பர் பாஸ்ட் ஏ.சி. ரயில் விடப்படுகிறது.  இந்த ரயில் (22475) வியாழக்கிழமை தோறும் பைகானூரில் புறப்படுகிறது.  கோவையில் இருந்து சனிக்கிழமை மதியம் 3.20 மணிக்கு புறப்படுகிறது.
 
2. ரயில் எண். 16561 யஷ்வந்த்பூர்- கொச்சுவேளிக்கு புதிய வாராந்திர ரெயில்  விடப்படுகிறது. இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை,  பாலக்காடு, திருச்சூர், கோட்டயம் வழியாக கொச்சுவேளி செல்கிறது.வியாழக்கிழமை  தோறும் யஷ்வந்த்பூரில் புறப்படுகிறது.
 
3. சாலிமர்- சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தோறும் பகல் 12.20 மணிக்கு சாலிமரில் புறப்பட்டு  புதன்கிழமை மாலை 5 மணிக்கு சென்ட்ரல் வந்து சேருகிறது.சென்ட்ரலில் இருந்து  வியாழக்கிழமை தோறும் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு 9.30  மணிக்கு சாலிமர் சென்று அடைகிறது. இந்த ரயில் கடந்த வாரம் முதல்  இயக்கப்படுகிறது.
 
4. விசாகப்பட்டினம்- சென்னை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில்  (22869) விடப்படுகிறது. இந்த ரயில் திங்கட்கிழமை தோறும் இரவு 7.20 மணிக்கு  விசாகப்பட்டினத்தில் புறப்படும். செவ்வாய்க்கிழமை காலை 8.55 மணிக்கு சென்ட்ரல்  வந்து சேரும். சென்ட்ரலில் இருந்து செவ்வாய்க்கிழமை தோறும் இரவு 9.10 மணிக்கு  புறப்பட்டு புதன்கிழமை காலை 10.25 மணிக்கு சென்றடையும்.
 
5. அசன்சால்- சென்னை சென்ட்ரல் வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12376)  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் புதன்கிழமை தோறும் மாலை 4 மணிக்கு  அசன்சாலில் புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 10.45 மணிக்கு சென்ட்ரல் வந்து சேரும்.  சென்ட்ரலில் இருந்து சனிக்கிழமை தோறும் பகல் 2.35 மணிக்கு புறப்பட்டு  ஞாயிற்றுக்கிழமை இரவு 9.55 மணிக்கு அசன்சாலுக்கு சென்று அடைகிறது.
 
6. சென்னை சென்ட்ரல்- பூரிக்கு வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22860)  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் திங்கட்கிழமை தோறும் மாலை 4.15  மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை பகல் 3 மணிக்கு சென்றடையும்.பூரியில்  ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை மதியம்  2.55 மணிக்கு சென்ட்ரல் வந்து சேரும்.
 
7. திருச்சி- திருநெல்வேலி தினசரி பகல் நேர ரயில்.
 
8. திருநெல்வேலி- தாதருக்கு வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில் (22630).
 
9. கச்சிகுடா- மதுரை வாராந்திர ரயில் விடப்படுகிறது. 17615 எண் கொண்ட இந்த  ரயில் தர்மாவரம், பாலக்காடு, காட்பாடி, ஈரோடு, திருச்சி வழியாக மதுரை  சென்றடையும். சனிக்கிழமை தோறும் காலை 6.06 மணிக்கு கச்சிகுடாவில் புறப்பட்டு  ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மதுரை வந்து சேரும். ஞாயிற்றுக்கிழமை தோறும்  பகல் 12.50 மணிக்கு மதுரையில் புறப்பட்டு திங்கட்கிழமை பகல் 2.05 மணிக்கு  கச்சிகுடா சென்றடையும்.10. திருப்பதி- மன்னார்குடிக்கு வாரம் மூன்று முறை செல்லும் எக்ஸ்பிரஸ் அறிமுகம்  செய்யப்படுகிறது. இந்த ரயில் (17407) திருப்பதியில் செவ்வாய், வியாழன்,  சனிக்கிழமைகளில் காலை 10.40 மணிக்கு புறப்படும்.மன்னார்குடிக்கு மாலை 4.35  மணிக்கு போய் சேரும்.மன்னார்குடியில் இருந்து புதன், வெள்ளி,  ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5.30 மணிக்கு புறப்படும்.மேற்கண்ட அனைத்து  ரயில்களும் அறிமுகம் செய்யப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
 
11. விழுப்புரம்- மயிலாடுதுறைக்கு பாசஞ்சர் ரெயில் விடப்படுகிறது.விழுப்புரத்தில் பகல்  2.40 மணிக்கு புறப்பட்டு மாலை 6.50 மணிக்கு மயிலாடுத்துறை சென்றடையும்.  மயிலாடுத்துறையில் பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்துக்கு மாலை 6 மணிக்கு  வந்து சேரும். இந்த ரயில் அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும்.12. விழுப்புரம்- காட்பாடி இடையே தினசரி பாசஞ்சர் ரயில் அறிமுகம்  செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு அடுக்கு மாடி ரயில் புதிதாக விடப்படுகிறது.இந்த  ரயில் குளு குளு வசதியுடன் தினசரி இயக்கப்பட உள்ளது.22625 என்ற எண் கொண்ட  இந்த ரெயில் சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்பட்டு  பெங்களூருக்கு பகல் 1.30 மணிக்கு போய் சேரும்.
 
பெங்களூரில் இருந்து பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு சென்ட்ரல்  வந்து சேரும். ஏசி இரண்டு அடுக்கு ரயில் ஜோலார்பேட்டை வழியாக விடப்படுகிறது.  அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, பங்காருபேட்டை,  கிருஷ்ணராஜபுரம், பெரம்பூர் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில் 11  ஏ.சி. சேர்கார் பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். அவை ஒவ்வொன்றும் 2 அடுக்கு  மாடிகளாக இருக்கைகள் அமைக்கப்படுகிறது.
இந்த ரயில் சேவை தொடங்குவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தட்கல் முறையில் மாற்றம்!


தட்கல் மூலம் டிக்கெட் வழங்கும் திட்டத்தில் பெருமளவில் ஊழல் நடைபெறுவதாக தெரியவந்துள்ளதை தொடர்ந்து, தட்கல் முன் பதிவுக்கு தனியாக நேரம் மற்றும் கவுண்டர்களை ஒதுக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.பயணிகளுக்கான தட்கல் டிக்கெட்டுகளை புரோக்கர்கள் முன்கூட்டியே பெற்றுக்கொண்டு அதை கூடுதல் விலைக்கு விற்று வருவதாக நீண்ட நாட்களாகவே புகார் இருந்துவருகிறது.இந்நிலையில் சமீபத்தில் சில ஆங்கில தொலைக்காட்சி சேனல்கள், தட்கல் டிக்கெட்டுகளை புரோக்கர்கள், ரயில்வே அதிகாரிகள் துணையுடன் முறைகேடாக முன்பதிவு செய்வதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தின.

இதையடுத்து இந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக அவசரகால ஒதுக்கீடு முறையைக் கொண்டு வர முடிவுசெய்யலாமா என ரயில்வே நிர்வாகம் ஆலோசித்ததாக கூறப்பட்டது.ஆனால் அந்த முடிவு கைவிடப்பட்டது.அதற்குப் பதிலாக , தட்கல் முன் பதிவுக்கு தனியாக நேரம் மற்றும் கவுண்டர்களை ஒதுக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக ரயில்வே உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்த தட்கல் கவுண்டர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும், பணி நேரத்தின்போது கவுன்டர்களில் இருக்கும் புக்கிங் கிளார்க்குகள்  மொபைல்போன்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் 

முத்தம் தற ஏத்த இடம்!

காதலின் முதல் மொழி முத்தம். நம் அன்பிற்குரியவர் நம்மீது கோபத்தோடு இருந்தால் கூட ஒரு முத்தத்தின் மூலம் கோபத்தை மாற்றிவிடலாம். முத்தமிடும் இடம் எங்கு என்பதைப் பொருத்து அதன் அர்த்தங்களும் மாறுகின்றன. உங்களின் எண்ணத்தை வெளிப்படுத்தும் சங்கேத பாஷையாகக் கூட முத்தத்தை பயன்படுத்தலாமாம். எங்கு முத்தமிட்டால் என்ன அர்த்தம் என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.காதலர்கள் அதிக அளவில் முத்தமிட நினைக்கும் இடம் உதடுகள் உதட்டில் முத்தமிட்டால் நான் உன்னை நேசிக்கிறேன் என்று அர்த்தமாம்.கைகளில் முத்தமிட்டால் நான் உன்னை பக்தியுடன் வணங்குகிறேன் என்று அர்த்தமாம்.கண்ணத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி என்று பாரதியாரே பாடியிருப்பார். ஆனால் கண்ணத்தில் முத்தமிட்டால் நான் உன்னுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமாம்.நாசியின் மீது முத்தமிட்டால் நீ ரொம்ப அழகா இருக்கே என்று அர்த்தமாம். கழுத்தில் முத்தமிட்டால் நீ எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம். அதே சமயம் காதின் மீது முத்தமிட்டால் சும்மா வேடிக்கைக்காக முத்தமிட்டேன் என்று அர்த்தமாம்.கண் இமைகளின் மீது முத்தமிட்டால் உன்னுடன் நான் எப்பொழுதும் இருக்க விரும்புகிறேன். நெற்றியின் மீது முத்தமிட்டால் நான் உன்னை மதிக்கிறேன் என்றும் நீ எனக்கு வேண்டும் என்றும் அர்த்தம் கொள்ளலாமாம்.ப்புறம் நம் நேசத்தைப் பொருத்து நாம் நேசிப்பவர்களைப் பொருத்து எங்குவேண்டும் என்றாலும் முத்தமிட்டுக் கொள்ளலாமாம்.

திருநள்ளாறு தெரியுமா?

திருநள்ளாறு என்றாலே தீர்த்த ஸ்தலம் என்று அனைவருக்கும் தெரியும், தற்போது கோயிலைச் சுற்றி நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இதில் நள தீர்த்தத்தில் குளித்தால் சனித்தொல்லை நீங்கும். பிரம்ம தீர்த்தத்தில் குளித்தால் முந்தைய சாபங்கள் ஒழியும். வாணி தீர்ததம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் மூடன் கூட கவி பாடுவான் என்று நம்பிக்கை. இங்கு தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், இது அனைவரும் அறிந்தது. இதற்கு அறிவியல் பூர்வமான சிறப்பு என்ன தெரியுமா?.. பல நாடுகளின் செயற்கைக்கோள்கள் பல்வேறு காரணங்களுக்காக பூமியை சுற்றி வருகின்றன. சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நாட்டின் செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள் ஸ்தம்பித்து விடுகிறது. 3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது. இது எப்படி என்பதை ஆராய்ந்த போது ஆய்வு முடிவு மிரள வைத்தது. எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில் இந்தியாவின் புதுச்சேரியின் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகின்றன. அதற்கு காரணம்? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புலனாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன. 2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45 நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன. விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன. அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்தக் கோவில்தான் இந்துக்களால் சனிபகவான் தலம் என்று போற்றப்படுகிறது. இதன்மூலம் உலகிலேயே அறிவுத்திறனும், அறிவியலில் ஞானமும் கொண்டவர்கள் அக்காலத்திலேயே இந்தியாவில் இருந்துள்ளனர் என்பது இதன் மூலம் புலனாகிறது. சனி கிரகத்தை இத்தாலி விஞ்ஞானி கலிலியோ வானமண்டலத்தில் இருந்ததை முதன் முதலாக பார்த்தார். பூமியில் இருந்து 128 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. சில சமயத்தில் பூமியிலிருந்து விலகிப் போனால் 164 கோடி கி.மீ., தூரம் இருக்கும். பூமியை விட 750 மடங்கு பெரியது. சூரியனை சுற்றும் கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன். அதற்கடுத்த இடத்தை சனி பெறுகிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...