இந்தியாவில் விளைவிக்கப்படும் சுவர்ணா வகை அரிசி, நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் உலக அளவில் முதலிடம் வகிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுவர்ணா வகை அரிசி சர்வதேச அளவில் சத்தான உணவு மட்டுமல்லாது, நீரிழிவு நோயையை கட்டுப்படுத்துவதிலும் முதலிடம் வகிப்பதாக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையம் (ஐஆர்ஆர்ஐ) தெரிவித்துள்ளது.நீரிழிவு நோய்க்கு காரணமான கிளைசீமிக் இண்டெக்சை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வை ஐஆர்ஆர்ஐ மேற்கொண்டது. இதில்சுவர்ணா வகையிலேயே, குறைந்த அளவு கிளைசீமிக் இண்டெக்ஸ் உள்ளது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment