இந்தியாவின் அண்டை நாடுகளாக இருக்கும் பாகிஸ்தான் மற்றும் இலங்கையை விடவும், ஏன் உலகில் முன்னேறிய நாடுகள் வரிசையில் இடம்பெற்றுள்ள அமெரிக்காவை விடவும், இந்தியாவில் தான் பெட்ரோல் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதே சமயம் ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடும் போது விலை குறைவுதான் என்றும் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஆர்பிஎன் சிங் கூறியுள்ளார். இதர நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் தான் டீசல் விலை குறைவாக உள்ளது. இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.68.46க்கு விற்பனையாகிறது. ஆனால், பாகிஸ்தானில் ரூ.53.32 ஆகவும், இலங்கையில் ரூ.61.56 ஆகவும், வங்கதேசத்தில் ரூ.62.25 ஆகவும் பெட்ரோல் விலை உள்ளது.அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை வெறும் ரூ.50.44 தான். ஐரோப்பிய நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை நூறு ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. அதே சமயம், இந்தியாவின் தலைநகர் புது தில்லியில் ஒரு லிட்டர் டீசலின் விலை 41.32 ரூபாயாக இருக்கும் நேரத்தில், பாகிஸ்தானில் ரூ.59.56 ஆகவும், இலங்கையில் ரூ.41.36 ஆகவும், வங்கதேசத்தில் ரூ.49.08 ஆகவும் உள்ளது. இந்த விலை வேறுபாடுகளுக்குக் காரணம், ஒவ்வொரு நாட்டிலும் விதிக்கப்படும் வரிதான் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment